பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆம்! தமிழ்க்கடல் அலை ஓசை ஒருநாளன்று, இருநாளல்ல, பலநாட் பழகிப் பலரொடு சென்று, பலபொழுது காணினும்--புதுப்புதுக் கோலங்காட்டி எழில் விருந்தளிப்பவள் குமரி முப்புறமும் அலைவீசும் கடல், அதன்மீது மீன்வாரி வரும் பாய் விரித்த படகுகள்! வடபுறம் வெண்மணற் குன்றுகள், பசுஞ்சோலைகள்! பச்சைப் பட்டு விரித்தது போன்ற கழனிகள்! விண்ணிலே-ஒளிக் கோளங்கள் வகைவகையான காட்சி தர, அவற்றை மறைத்திடும் மேகக் கூட்டங்கள் ! மண்ணிலே -பல வண்ணப் பொடிகள், நீர்த்திவலை அள்ளிவரும் தென்றல் காற்று! இவை உடலும் உள்ளமும் சிலிர்த்திடச் செய்யும் இன்பமன்றோ! இந்தக் காட்சிகளை எல்லாம் பைந்தமிழ்ச் சொல்லாலே பாடி நிலைபெறச் செய்திட நான் ஒரு கவிஞனும் அல்லேனே! வண்ண ஓவியம் ஆக்கிட ஒரு கலைஞனும் அல்லேனே! என்றுதான் உள்ளம் கவன்றது. மறுகணம் - குமரியைப் பாரதியார் காட்சி தந்தார். பாடிய, புதுமைக் கவிஞர் - "நீலத் திரைக்கடல் ஓரத்திலே - நின்று நித்தந் தவஞ்செய் குமரி எல்லை" என்று பாடினாரல்லரோ அவர்! தென் எல்லையாக நிற்கும் குமரி - கடல் ஓரத்திலே நிற்கிறது, நித்தந் தவஞ்செய்கிறது, என்பதைக் கவிஞர் கூறியதை எண்ணியபோது, அந்த எல்லையையேனும் கடல் கொள்ளாது காக்கத்தான் குமரி தவஞ் செய்கிறதோ! என்று உள்ளங் குழைந்தது.