குமரிக் காட்சி தென் குமரியைப் பாடிய கவிஞர், "வட மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு' என்று வட எல்லையையும் குறித்தார். பாப்பாவிற்கு எனப் பாட்டிசைத்த போதும், "வடக்கில் இமயமலை பாப்பா! தெற்கில் வாழுங் குமரி முனை பாப்பா! கிடக்கும் பெரிய கடல் கண்டாய்-இதன் கிழக்கிலும் மேற்கிலும் பரப்பா !" று 5 என்று இதனை வாழுங் குமரி என்று புகழ்ந்தார். ஆம்! இந்தக் குமரிதான், நாம் வாழத் துணையாகும் குமரி! தமிழ் வாழ நிலையாக நின்ற குமரி! "சூழும் தென்கடல் ஆடுங் குமரி தொடரும் வடபால் அடல்சேர் வங்கம் ஆழுங் கடல்கள் கிழக்கு மேற்காம் அறிவும் திறனும் நிறைந்த நாடு” என்று தென் கடலலை ஆடும் குமரியைப் போற்றிப் பாடினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். இவ்வாறு குமரிமுனை போற்றப்பட்டது இந்நாளில்- இருபதாம் நூற்றாண்டில். இந்தக் குமரி முனை என்னும் பெயர்தானும் இதற்குப் பொருந்தியது, தமிழ் வழங்கு 'நிலத்தின் தெற்கு எல்லையாக நின்றதால்தான், தமிழ் வழங்கும் நிலமாக விளங்கிய பகுதியிலுள்ளும் சிறப்பு நோக்கி, 'பாண்டிய நாடே' 'செந்தமிழ் நாடு' என்று வழங்கப்பட்டு வந்துள்ள காலத்தில், அதன் எல்லை கூற வந்த ஒரு புலவர், பாடியது இது;
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/24
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
