தமிழ்க்கடல் அலை ஓசை வெள்ளாறது வடக்கு, மேற்குப் பெருவெளியாம், தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் உள்ளான ஆய்ந்த கடல் கிழக்(கு) ஐம்பத்தாறு காதம் பாண்டி நாட்(டு) எல்லைப் பதி" இவ்வாறு புனல் கன்னி என்று குறித்தது, குமரிமுனை தழுவி நிற்கும் கடலையே ஆகும். இலக்கண நூலாகிய நன்னூலில், << 'குண கடல், குமரி, குடகம், வேங்கடம் எனும் நான் கெல்லை என்று பவணந்தியால் குறிப்பிடப்பட்டதும்- இந்தக் கடல் சூழ்ந்த குமரியேயாகும். அதற்கு முன்னர்க் 'குமரி' என்றழைக்கப்பட்டது, இதன் தெற்கே நின்ற பிறிதோர் 'குமரி' என னவும் அதனைக் 'குமரிக்கோடு' என்றும் "குமரியாறு" என்றும் அழைத் துள்ளனர் எனவும் - அதன் தெற்கேயும் நிலப்பரப்பு இருந்தது எனவும் அறிகின்றோம். ஒல்காப்புகழ் இலக்கணமாகிய தொல்காப்பியத்திற்குப் பனம்பாரனார் வரைந்த சிறப்புப் பாயிரத்தின்கண், "வடவேங்கடம் தென்குமரி, ஆயிடை தமிழ் கூறு நல்லுலகத்து' என்று என வருகிறது. இதன்கண் வரும் குமரி-ஓர் ஆறு எனவே கொண்டனர், உரையாசிரியர்களான இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும். "குமரியாற்றின் தெற்கு நாற்பத் தொன்பது நாடு கடல் கொண்டதாகலின்,' குறிப்பதால் - அந்தக் குமரி -- தமிழகத்தின் தெற்கு எல்லையில் ஓடியதோர் ஆறு என்பதும், அதன் தெற்கேயும் நாடுகள் பல இருந்தன என்பதும் அவை முதல் கடல்கோளால் அழிந்தன என்பதும் - அவை அழிந்த பின்னும், அஃது ஓர் ஆறாகவே நின்றது என்பதும், அந்த ஆற்றுக்கும், இன்று நிலவும் குமரி முனைக்கும் இடையேயும் ஒரு நிலப்பகுதி பாண்டிய நாடு
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/25
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
