பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரிக் காட்சி 7 ஆக நிலவி இருந்தது என்பதும், இரண்டாம் கடல்கோளி னாலேயே அப் பரப்பும் அழிந்தது என்பதும் பெறப்படும். பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடிய காரிகிழார் என்னும் புலவர், அவனது நாட்டு எல்லையைக் கூறுங்கால், "வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும், தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும் குணாஅது கரையொடு தொடுகடல் குணக்கும் குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்' (புறம்-6) எனச் சுட்டுகிறார். இதன்கண் குமரி என்பதற்குக் கன்னியாறு எனப் பழைய உரைகாரர் கூறியுள்ளார். புறநானூற்றில் கோப்பெருஞ் சோழனைப் பாடிய பிசிராந்தையார் என்னும் புலவர் அன்னச் சேவலை விளித்துப் பாடுமிடத்து, "குமரி அம் பெருந்துறை அயிரை மாந்தி வடமலை பெயர்குவை ஆயின், இடையது சோழ நன்னாட்டுப் படினே" எனக் கூறுகிறார். ஈண்டும், இதன் பழைய உரையின்கண் "குமரியாற்றின் பெரிய துறைக் கண்ணே கூறப்பட்டுள்ளது. என்றே மற்றும், இளங்கோ தந்த சிலப்பதிகாரத்தின் வேனிற் காதையில், "நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ்வரம் பறுத்த தண்புனனாட்டு" > பௌவ எனத் தமிழக எல்லை கூறுமிடத்து, தொடியோள் மெனக் குறித்தது, குமரிக் கடலையே (குமரி முனைதான்) எனி னும், அக்காலத்திற்கு முன்னர், தமிழ் நிலத்தின் "தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னும் ஆற்றிற்கும் குமரியாற்றிற்கும் இடையே - எழுநூற்றுக்காவதவாறும்.......