பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தமிழ்க்கடல் அலை ஓசை தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின் காறும் கடல்கொண் டது" -என அடியார்க்கு நல்லார் உரையினின்றும் அறியப்படு தலால் - கடல்கோளுக்கு முன்னர் ஒருகாலத்தில் குமரியாறு தெற்கு எல்லையாக நின்றது தெளிவு. க பின்னரே குமரிக் கடல் (முனை) தமிழகத்தின் தெற்கு எல்லையாய்க் குறிக்கப்படலாயிற்று என விளக்கம் உரைத்தார் அடியார்க்கு நல்லார். சிலப்பதிகாரத்தின் காடுகாண் காதையில்-இளங்கோ வடிகள், என்று "வடிவே லெறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்திசை யாண்ட தென்னவன்" கூறுவதிலிருந்து,-இது மேலும் தெளிவாகும். இதனால் பஃறுளியாற்றுடன் குமரியாற்றையும் கடல் கொண்டது தெளிவு. ஒரு வேளை குமரிக் குமரிக் கோடு என்றதால் அது மலையேயாக வேண்டும் எனக் கொள்ளினும்- குமரியாறு தோன்றிய மலையாகக் கூடும். இதனால்-இன்று நிலவும் குமரி முனைக்குத் தெற்கே, பழந்தமிழ் நாட்டின் தென் பகுதி நிலவியதும், அந்தப் பரப்பினில், பஃறுளி குமரி என்னும் பாறுகளும் மலைகள் பலவும் இருந்தனவாதலும், அக்காலத்தின் தென் எல்லையாக நின்ற குமரியாற்றுக்குத் தெற்கிலும்- பிற நாடுகள் பலவிருந்து கடல்கோளால் அழிந்துபட்டன என்பதும் துணியப்படும். ன் இவ்வாறு குமரி, ஒரு முனையாக நிற்பினும் கடலாகவும் விரிந்து, முன்னாளில் ஆறாக ஓடி, ஒரு பெரு நிலப்பரப்பு மறைந்ததற்குச் சான்றாக நிலவுகிறது. தமிழகத்தின் தெற்கே விளங்கிய ஒரு பெரு நிலப்பரப்பு, கடல்கோள் பலவற்றால் மறைந்த அக்கண்டம்-வரலாற்று ஆசிரியர்களால் குமரிக் கண்டம் (லெமூரியா) என்றே அழைக்கப்படுகின்றது.