பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரிக் காட்சி தொல்லுலகில் நின்று அழிந்த குமரிக் கண்டத்துக்கும், அங்குத் தோன்றி வளர்ந்த தமிழ் இனத்தவரின் தொன்மைக் கும். அவரிடையே அரும்பி மலர்ந்த தமிழ் நாகரிகத்தின் தனித் தன்மைக்கும், அவர் தம் அறிவீனில் முகிழ்த்து வாழ்வினில் கலந்த முத்தமிழின் முதன்மைக்கும் இன்றைய குமரிமுனை -நீடு புகழ்பாடி நிலைத்திருக்கும் சின்னமாய் விளங்குகின்றது - அங்கு எழும்பியுள்ளதொரு கோயிலில் விளங்கும் காவல் தெய்வமும், கன்னியா குமரி-என்றே அழைக்கப்படுவது, எத்தனையோ கடல் கோள்களினாலும் அழியாது நிலைத்த கன்னித்தமிழையே கோயில் கொள்ளச் செய்ததெனத் தோன்றும்! கன்னி கழியாக் குமரியா க- திருமணம் கொள்ளாத - மகளாகப் பேசப்படுவது-கன்னித் தமிழ் மொழியின் தனித்து நிற்கும் இயல்பினை விளக்கவே போலும்! து கடல் எனப் பரந்து விரிந்த தமிழ் மொழி இலக்கியங்களுள், அலை எனத் தோன்றிய வண்ணம் இருக்கும் செய்யுட்களையும் அலைஓசை என ஒலித்திடும் செய்திகளையும் செவி கொடுத்துக் கேட்போர்க்கு, ஒரு காலத்தில் தமிழர்கள் வாழ்ந்திருந்த பெருவாழ்வும், தலைநிமிர்ந்து நின்ற உயர்நிலையும்; இடைக் காலத்தில், தமது தனிநிலை காக்கத் தவறியமையின், அறிவு மயக்குற்று இடறி வீழ்ந்து தாழ்ந்த வகையும் அவர்தம் உணர்வைத் தட்டி எழுப்பிச் சிந்தனையைத் தூண்டுமா தலின் இந்நாளில் தமிழர்தம் வாழ்வை ஈடேற்றும் வழிவகைபற்றிய எண்ணம் உள்ளத்தில் ஊற்றெடுக்கத்தான் செய்யும் ! கடல்கோளுக்குத் தப்பி நிலைத்த குமரிமுனையில் நின்று அக் காட்சியைக் கண்டு- கடந்த தாலத்தை எண்ணுவோர்க்கு- முத்தமிழ்க் கடலின் கலை, இலக்கிய அலைகள் எழுப்பும் பாட்டோசையும், பொருளும் புலனாகாமற் போகா ! தமிழ்க் கடலில் எழும் அலையே கலை, இலக்கியம்! அதன் ஓசையே- பாட்டு, பொருள், கருத்து! 9 !