பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருடருக்கு விழி! கடல்கோளால் அழிந்த குமரிக்கண்டம், குமரியாறு முதலியன பற்றி அறியாத இந்நாள் மக்களைப்போன்றே, அழியாது வாழும் தமிழ் மொழியின் தோற்றம், தொன்மை, தனிமை, இனிமை, நன்மை, மேன்மை, இளமை, வளமை பற்றியும் அறியா தவர்களே தமிழருள்ளும் பலராவர். தமிழ் முத்தமிழாகக் கிளைத்து, இயலாகவும், இசையாக வும், கூத்தாகவும், கருத்துக்கும் விருந்தாகும் சிறப்புப் பற்றியோ; வாழ்க்கையினைச் சுவைப்படுத்தும் காதுக்கும் சுண்ணுக்கும் அகமாகவும், புறமாகவும் மாட்சியைப் பற்றியோ;