பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருடருக்கு விழி . 11 அறம்,பொருள், இன்பம் என்னும் முப்பாலாக வாழ்க்கையை விளக்கி நிற்கும் திறன் பற்றியோ; பிறமொழிகள் பெறாதன வாய்த் தமிழ் மட்டுமே பெற்றுள்ள இலக்கிய இலக்கண நூல் களின் உயர்வு பற்றியோ; இன்னும் தமிழர்கள் அறிந்தவராக வில்லை. இந்நிலையில்தான் தமிழ் மக்களிடையே தாய்மொழிப் பயிற்சியும், தமிழக வரலாறுபற்றிய கேள்வியும் இந்த நூற் ருண்டில் அண்மைக் காலத்திலே தொடங்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியின் மாட்சியும், தமிழர் ஆட்சியின் உயர்ச்சி யும், தமிழர்களாலேயே ஏற்கப்படாத அளவு தாழ்வு மனப் பான்மை அவர்களிடையே குடிகொண்டிருந்தது. தமது தாய் மொழி தமிழ் என்னும் பற்றும், அதைப் போற்றி வளர்ப்பது தமது கடன் என்னும் தெளிவும் அற்றிருந்த நிலையில், தம்மை ஆட்கொண்ட தெய்வமொழி சமஸ்கிருதம், அரசியல் சட்ட மொழி ஆங்கிலம், இசை ஞானம் வழங்கும் மொழி தெலுங்கு, தம்மை ஆள்வதற்கு உரியவர்கள் பிறநாட்டார் என்று மயங்கிக் கிடந்தனர். கடந்த ஒரு நூற்றாண்டாகத்தான், ஆங்கிலேயர் ஆட்சியினால் ஏற்பட்ட மேலை நாட்டுத் தொடர்பாலும், விஞ்ஞான முடிவுகளின் பயன்களாலும், மேலைநாட்டு அறிஞர் பலர் 'தமிழ்' குறித்து நிகழ்த்திய ஆராய்ச்சியாலும், இந்தியாவின் விடுதலை இயக்கம் ஊட்டிய உரிமை வேட்கையாலும், தமிழ்க் கவிஞர் களும், அறிஞர்களும் தமிழ்மொழியில் பூத்திடச் செய்த மறுமலர்ச்சி எண்ணங்களாலும் பொதுமக்கள் தெளிவடையத் தொடங்கினர். ஒவ்வொரு துறையிலும் வெவ்வேறு அளவிலும் வகையிலும் மறுமலர்ச்சியின் மணத்தை இன்று நுகரமுடிகிறது. எனினும் இன்றுங்கூடத் தமிழ்மொழி தனக்கு உரிமையான கு எல்லாச் சிறப்புகளையும் எய்தியபாடில்லை. இன்றும் பெரும் பாலான தமிழர்கள், தமிழ் கற்றுத் தேர்ந்த தமிழர்களுங்கூட தாம் நிகழ்த்தும் கோயில்வழிபாடு முதல் திருமணவிழா முதலான குடும்பச் சடங்குகள் வரை தெய்வமொழி என்று நம்பும் வடமொழிக்கே இடமளிக்கின்றனர். வடமொழியில் உள்ள வேதங்கள், ஆகமங்கள், சாஸ்திரங்கள், இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவை இன்றும் தமிழரால் போற்றிப் பரவ வேண்டிய ஏடுகளாகவே நம்பப்படுகின்றன. பகவத்கீதையும்