பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தமிழ்க்கடல் அலை ஓசை மனுதர்மமுமே இன்றும் தமிழர்க்குத் தரும விளக்கம் செய்யும் நூல்களாகப் பேசப்படுகின்றன. முப்பது ஆண்டுகட்கு முன்னர்த் தமிழிலே புலமை பெற விரும்பும் எவரும் பல்கலைக் கழகத்தில் தகுதிச்சான்று பெற வேண்டின் வடமொழியிலும் தேர்ச்சி பெற்றாகவேண்டிய நிலை இருந்தது. அந் நாட்களில் வடமொழி அறிவு இன்றித் தென் மொழி அறிவு நிறைவுடையதாகாது என்னும் எண்ணமும் இலக்கிய வளமுள்ள மொழி (Classical language) வட மொழி, தமிழ் ஒரு வட்டாரப் பேச்சுவழக்குமொழி என்னும் தவறான கருத்தும், வடமொழியின் துணையின்றித் தமிழ் தனித்து இயங்காது என்னும் அறியாமையும் நிலவின. சமய ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தென்னகத் தில் ஆட்சி நடத்திய பல்லவர் முதலான அரச வழியினர் தமது ஆட்சி முறையில் வடமொழிக்கு முதன்மை அளிக்கத் தலைப்பட்ட தாலும், வளர்க்கப்பட்ட உணர்ச்சிகளோடு கலந்து வடமொழியும் இடம்பெறச் செய்யப்பட்டு வந்ததாலும், அது அண்மைக் காலம்வரை தமிழ்மக்களின் வாழ்வில் நீக்கமற நிறைந்து ஆட்கொண்டிருந்தது. சமஸ்கிருதம் தேவ பாஷை, தமிழ் நீச மொழி என்றும்; சமஸ்கிருதம் பூதேவர் மொழி, தமிழ் சூத்திரர் மொழி என்றும்; தமிழில் உள்ள இராமாயண மும், பாரதமும், மற்றைய புராணங்களும் வடமொழியில் இருந்தே வந்தவையாதலின் தமிழ் வடமொழி மூலத்தைக் கொண்டே வளர்வது என்றும் தவறாக உணர்த்தப்பட்டன. இரண்டு மூன்று நூற்றாண்டுகட்கு முன்னரேகூட வடமொழி ஆதிக்கம் மேலோங்கிய நிலையில், தமிழ் மொழியிலே நிறைந்த புலமை கொண்டவர்கள் சிலர் தமிழ் தாழ்வது காண மனமில் லாதவர்களாய் வடமொழியோடு ஒப்பத் தமிழுக்கும் மதிப்புத் தேட முயல்வாராயினர். வடமொழி சிவபெருமானின் கையிலுள்ள உடுக்கையின் வலப்பக்கத்து ஓசை எனின், தென்மொழி அந்த உடுக்கையின் இடப்பக்கத்து ஓசை எனவும், வடமொழி கலைமகளின் வலக்