குருடருக்கு விழி 13 கண்ணாக ஒளிரும் நிலைபெற்றதெனில், தென்மொழி கலைமகளின் இடக் கண்ணாக ஒளிர்கிறது எனவும் வாதிட்டனர். ஆனால், இந்த வாதத்திலும் வலமும், வலியதும் வடமொழியே என்ற கருத்தும், இடமும் இளைத்ததும் தென்மொழியே என்ற கருத்துமே நாளடைவில் நிலைபெற்றன. சிவநெறி வளர்த்த சிவஞான அடிகளார், வடமொழியும் தென்மொழியும் ஒத்த நிலை யுடையன என்று குறிப்பதற்காக, 'இரு மொழிக்கும் கண்ணுத லார் (சிவன்) முதற்குரவர்' என்று குறித்ததோடு, என்று 'வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி யதற்கிணையாத் தொடர்புடைய தென்மொழியை யுலகமெலாம் தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்' கூறியுள்ளார். இவ்வாறு வடமொழியினும் தமிழ் தாழ்ந்ததன்று என்று தன்னம்பிக்கை கொள்ளவே பல பெருமை களைக் கற்பித்துக் கூற வேண்டிய தாயிற்று சிவஞான அடிகளார் காலத்தில். சிவஞான அடிகளாருக்கு முன்னர் வாழ்ந்திருந்த ஈசான தேசிகர் என்பார் தாம் எழுதிய 'இலக்கணக் கொத்து' என்னும் லில் தமது வடமொழி அறிவையும் பற்றையும் உணர்த்திட விரும்பி, தூ "ஐந்தெழுத் தாலொரு பாடையும் உண்டென அறையவும் நாணுவர் அறிவுடை யோரே என்று கூறிச் சென்றார். தமிழ் எழுத்துகளுள், வடமொழி நெடுங்கணக்கில் இல்லாதனவாக ற, ன, ழ, ஏ, ஓ என்னும் ஐந்து எழுத்துகளே உள்ளனவாக பிறவெல்லாம் வடமொழி யிலும் காணப்படுதலின், தமிழை ஒரு தனிமொழி என்று கொள்ளுதற்கே நாணவேண்டும் என்பது அவர் கருத்து. அவர்தம் தெளிவற்ற மொழியறிவும் தாழ்வுமனப்பான்மையும் தமிழையே தாழ்த்தச் செய்துவிட்டன.
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/32
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
