பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தமிழ்க்கடல் அலை ஓசை இவ்வாறெல்லாம் கற்றவரும் கல்லாதவரும் தம் தாய் மொழியின் மாட்சியை உணர்தல் இன்றி வடமொழியைப் போற்றித் துதித்து வாழ்கின்ற நிலையே பொதுத்தன்மையாக நிலவியது. தமிழ்ப் பெரும் புலவர்கள் பலர், தொன்னாள் முதலாகவே தமிழைப் போற்றி வழங்கியிருப்பினும், அவை நினைவுகூரப்படுதலும் இன்றித் தமிழ், தமிழர் மதிப்பிலேயே தாழ்ந்து கிடந்தது. மக்கள் இந்நிலையில் தேசீய விடுதலை உணர்ச்சியோடு கலந்து அரும்பிய தாய்மொழிப் பற்றும், அப் பற்றுடன் உணர்ச்சியைத் தட்டி எழுப்பிய புதுமைக் கவிஞர்களின் பாடல்களுமே, தமிழின் மறுமலர்ச்சிக்கும், புதுவாழ்விற்கும் அடிப்படையாய் அமைந்தன. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த தேசீயக் கவி சுப்பிரமணிய பாரதியாரின் குரலே தமிழ்நாட்டு மக்களைப் புத்துணர்ச்சி கொள்ளச் செய்த முதல் குரலாகும். தமிழ் வடமொழியினும் தாழ்ந்ததன்று என்பதை உணர்த்துவாராய்த் தமிழ்த்தாய் தன் மக்களுக்குக் கூறும் மொழியாக அவர் பாடியது இது: "ஆதி சிவம் பெற்றுவிட்டான் - என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான். இக்கூற்று, வரலாற்று ஆராய்ச்சிக்கு ஏற்காவிடினும், சிவன் பெற்ற மொழி தமிழ், அகத்தியன் இலக்கணம் வகுத்த மொழி தமிழ் எனக் கூறி வடமொழிக்கு ஒத்த தகுதி நிலை தமிழுக்கு உண்டு என்றார். அஃது அவர் கருத்தாதலை "மூன்று குலத்தமிழ் மன்னர் - என்னை மூண்ட நல்லன்போடு நித்தம் வளர்த்தார் ஆன்ற மொழிகளி னுள்ளே-உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்" என்பதனால் கெளியலாகும்.