குருடருக்கு விழி 15 மேலும் தமிழ்த்தாய் கூறுகின்றாள்: "கள்ளையும் தீயையும் சேர்த்து நல்ல காற்றையும் வான வெளியையும் சேர்த்துத் தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் பல தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்' 'கன்னிப் பருவத்தில் அந்நாள் என்றன் காதில் விழுந்த திசைமொழி யெல்லாம் என்னென்ன வோபெய ருண்டு பின்னர் யாவும் அழிவுற் றிறந்தன கண்டீர்! தந்தை அருள்வலி யாலும் முன்பு சான்ற புலவர் தவவலி யாலும் இந்தக் கணமட்டும் காலன் என்னை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி யிருந்தான்" தமிழ்ப்புலவர்கள், இயற்கையைக் கண்டு உணர்ந்து தாமே முதல் நூல்களாகப் பல தீஞ்சுவைக் காவியம் (கவிதைகள்) செய்து கொடுத்தார் என்பதனால், தமிழில் உள்ள இலக்கியங்கள் எல்லாம் வடமொழி வழிவந்தவை என் எண்ணத்தை மறுத்தார். தமிழ் மொழியின் கன்னிப் பருவத்தில் எத்தனையோ தனி மொழிகள் இருந்தனவாகவும் அவை பலவும் காலவெள்ளத்தில் நிலைகொள்ள முடியாமல் அழிவுற்று மறைந்தன என்றும் கூறுவதன் மூலம் தமிழனைய தொன்மையும், மேன்மையும் கொண்டு திகழ்ந்த ஈப்ரூ, - இலத்தீன் - முதலான பிற மொழிகளும், தமிழினும் மேன்மையானது என்று பலரும் போற்றிய வடமொழியுங்கூட வழக்கிழந்து இறந்துவிட்டன என்பதைக் கூறாமல் கூறுகிறார். இதனால் இயற்கையோடு பிறந்து இயல்பாகவே வளர்ந்து இன்றளவும் வழங்கி வாழும் வளமுள்ள தமிழே மேலான மொழி என்று அவர் கொண்ட கருத்துத் தெளிவு விளங்கும்.
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/34
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
