பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தமிழ்க்கடல் அலை ஓசை இறைவன் படைத்த மொழி, தெய்வ பாடை என்றெல்லாம் போற்றப்படும் வடமொழியைக் காலன் அணுகிவிட்டானாகத் தமிழை வளர்த்த புலவர்தம் ஆற்றலால் இந்த நேரம் வரையிலுங்கூட அழிவுக்குரிய காலன் தமிழை எதிர்நோக்கி விழித்திடவும் அஞ்சி இருந்தான் என்றதனால் தமிழின் உயிர்த் தன்மை எந்நாளும் நிலைபெறும் அழியாச் சிறப்புடையது என்று அவர் உள்ளம் போற்றியதைக் காணலாம். பாரதியாரின் உள்ளத்தில் முளைத்தெழுந்த தமிழ்ப் பற்று பல்வேறு வடிவத்திலும் வெளிப்பட்டது. தமிழ் மொழியை வாழ்த்தி அவர் இசைத்தது இது: "வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே! வான மளந்த தனைத்தும் அளந்திடும் வன்மொழி வாழியவே! ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசைகொண்டு வாழியவே! எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே! சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே! தொல்லை வினை தரு தொல்லை யகன்று சுடர்க தமிழ்நாடே! வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி. வாழ்க தமிழ்மொழியே! வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே!" எங்கள் மொழி, வன் மொழி வளர்மொழி எல்லாம் அறிந்து அறிவிக்கும் மொழி என்று தமிழை வாழ்த்தி வணங்கினார் அவர்.