குருடருக்கு விழி 17 தமிழின் தனிச்சிறப்பு இயல்புகளையும், தமிழைப் போற்ற வேண்டிய கடமையையும் அவர் பின்வருமாறு உணர்த்தினார்: "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்; பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்வீர்; தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." பாரதியார், பிள்ளைப் பருவத்திலேயே சமஸ்கிருதமும், ஆங்கிலமும் பயின்றவர். மாணவ நிலையில் காசியில் வாழ்ந்த காலத்தில் இந்தியும் கற்றவர். அரசியலாரின் தொல்லை காரணமாகப் புதுச்சேரியில் சென்று வாழ்ந்த நாட்களில் பிரஞ்சு மொழியும் அறிந்தவர். இசை விருப்பத்தால் தெலுங்கும் தெரிந்தவர். எனினும், யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று முழங்கினார் எனில் பிறமொழிகளினும் தமிழ் எப்படியெல்லாம் இனித்திருக்க வேண்டும்! இவ்வுலகில் மட்டுமேயன்றி மேலுலகிலும் காணோம் என்னும் நினைப்பாலன்றோ எங்குங் காணோம் என்றார்! என்னே தமிழின் மாட்சி! தமிழ்மொழியின் மேன்மைக்குச் சான்றாவன தமிழ் இலக்கியங்களேயா தலின் அந்தக் கவிதைச் செல்வங்களை நிலைபெறுமாறு அளித்த தண்டமிழ்ப் புலவர்களைப் போற்றிடவும் அவர் தவறவில்லை. 'யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை; உண்மைவெறும் புகழ்ச்சி இல்லை; ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்; சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்! 2
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/36
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
