18 தமிழ்க்கடல் அலை ஓசை தமிழகத்தே பிறந்த தலைசிறந்த தமிழ்ப் புலவர்களை ஒப்பாரும் மிக்காரும் உலகினில் வேறெங்கும் பிறந்ததில்லை என்பதன் மூலம் தமிழ்மொழி தந்த தனிப்புலமையும் தன்னிக ரற்ற ஆற்றலும் உணர்த்தப்பட்டனவல்லவோ! அந்தச் சிறப் புள்ள தமிழோசை உலகமெல்லாம் பரவவும் தமிழகத்துத் தெரு வெல்லாம் முழங்கவும் அவர் ஆணையிட்டார். அந் நாட்களில் தமிழ் மக்கள் நிலைதான் யாது? "உலகமெல்லாம் இகழ்ச்சி சொல்ல, அறியாமையினால் பாமரராய்; உரிமையின்மையினால் விலங்குகளாய்; தமிழைப் போற்றிப் பாடாமையினால் ஊமையராய்; பாடிக்கேட்டு மகிழாமையினால் செவிடர்களாய்; தமிழின் மேன்மையைக் காணாமையினால் குருடர்களாய்; பெயரளவில் மட்டும் தமிழர் எனப் பிறர் நம்மைக் கண்டுகொள்ளத் துணையாகத் தலை கவிழ்ந்தே இங்கு வாழ்ந்திடுகின்றோம்," என்றார் பாரதியார். அவர். இந்த நிலை மாறவே, உள்ளக்கிளர்ச்சி எழப் பாடினார் 'உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின் வாக்கினிலே ஒளியுண் டாகும் வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவு மாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்வார் தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார்" இதனால் குருடருக்கு விழியாகவும், வாழ்வுக்கு அமுதமாகவும் இன்பம் செய்யும் தமிழ் அறிவு பெற்றுத் தமிழ் மக்கள் எல்லாரும் உயர்வடைய வேண்டுமென்ற அவரது பேரவா புலப்படும். அத்தகு தாய்மொழிப் பற்றினைக் குழந்தைகட்கும் ஊட்டிவிட விரும்பிய பாரதியார்,
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/37
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
