பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 குருடருக்கு விழி "தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள் தாயென்று கும்பிடடி பாப்பா! அமிழ்தில் இனியதடி பாப்பா - நம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா: சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே!- அதைத் தொழுது படித்திடடி பாப்பா !" என்று உணர்த்தினார். 19 தமிழ்நாட்டு வாழ்த்துப் பாடியவிடத்தும், தமிழ் தந்த இன்பத்தையே பெரிதாக எண்ணியவர், - "செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே' பாலாக, என்று தொடங்கினார். செந்தமிழ், தேனாக, அமிழ்தமாக அவர் நெஞ்சை நிறைத்தது. அவர் உள்ளத்தினிலே ஏற்பட்ட நிறைவு, அவர்தம் சொல்லாலே கவிதையாலே தமிழர்தம் செவிவழி பாய்ந்து, அறிவை நிறைத்துப் புத்துணர்ச்சி ஊட்டியது. தமிழ் மறுமலர்ச்சிக்குக் கவிஞர் பாரதியார் வித்திட்டார். தமிழரிடையே தாய்மொழிப் பற்று அரும்பிற்று ! குருடர்களும் விழி பெற்றனர் !