பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மணக்குந் தமிழ்! "பாட்டுக்கொரு புலவன் பாரதியடா!" என்னும் தனிப் பாராட்டுக்குரிய புதுமைக் கவிஞர் பாரதியார் வாழ்ந்த காலத் திற்கு முன்னர், மேல் நாட்டு அறிஞர் பெருமக்கள் சிலரது அருந்தொண்டினாலேயே தமிழின் தனிச் சிறப்புகள் கண்டறி யப்பட்டு உலகிற்கு உணர்த்தப்பட்டன. மேல் நாட்டினின்றும் கிறித்தவ சமயத் தொண்டாற்ற வந்த பாதிரிமார்கள் பலர். அவர்களுள்ளும் சிலர், சமயக் கருத்துக்களைப் பரப்புவதற்குத் துணையாக, நம் நாட்டு மக்களின் மொழிகளைப் பயின்று தேர்ச்சி பெற்றனர். தாம்