புகழ் மணக்குந் தமிழ் 21 முன்னரே கற்றுத் தெளிந்திருந்த மேலை மொழிகள் சிலவற்றோடு தமிழ் மொழியையும் கேட்டும் கற்றும் தெளிந்த நிலையில் பிற மொழிகளோடு ஒப்புநோக்கி ஆராய்ந்து பார்த்துத் தமிழ் மொழியின் தனித்தன்மையையும், பிற மொழிகளிடம் காணாத சிறப்பியல்புகளையும் கண்டு வியந்து, போற்றி உரைக்க. முற்பட்டனர். தமிழின் தொன்மையையும் மேன்மையையும் உலக அறிஞர்கள் ஒப்புக்கொள்ளும் வண்ணம் தக்க சான்று களுடன் நூல்களும் இயற்றினர். அந்நூல்கள் பலவும் ஆங்கிலம் முதலான பிற மொழிகளிலே இயற்றப்பட்டன வாகலின் தமிழ் மக்கள் அக்கருத்துகளை உடனடியாக அறிந்து பயன்கொள்ள முடியவில்லை. ஆங்கிலத் தேர்ச்சியும் தமிழ்ப் புலமையும் நுண்ணறிவும் ஒருங்கே கொண்டிருந்த தமிழ்நாட்டு அறிஞர் பலரால், மக்கள் உள்ளங்கொள்ளும் வண்ணம் அக்கருத்துகள் எடுத் துரைக்கப்பட்ட பின்னரே, தமிழரிடையே அக்கருத்துக்கள் இடம் பெற்று உரம் பெறலாயின. அதுகாறும் தமிழுக்குக் கற்பிக்கப்பட்டு வந்த தகுதிக் குறைவும் வடமொழி வழிவந்ததென்னும் இழுக்கும், களையப் படுவதற்கும், தமிழ் மொழியின் தனி உரிமைகளும், பெருமை களும் காக்கப்படுவதற்கும் வேண்டிய துணிவும், தெளிவும் தமிழ் கற்றவரிடையே பிறக்கலாயின. தமிழின் மாட்சியைத் தலை நிமிர்ந்து முழங்கவும், தமிழை இழிப்பவர்தம் நோக்கைத் தூவென உமிழவும் தமிழ் பயின்றோரும், "தமிழர்" எனத் தெளிந்தோரும் தன்னம்பிக்கை கொள்ள, தமிழறிஞர்தம் பாட்டும் உரையும் பயன்பட்டன. அத்தகைய வழிகாட்டிகளான அறிஞருள் ஒருவர் தாம் மனோன்மணீயம் என்னும் தமிழ்நாடக நூலை இயற்றி வழங்கிய பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள். இற்றைக்கு எண்பது ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்திருந்த அப் பெரியார் தமிழோடு ஆங்கிலப் புலமையும் தத்துவ நூல் கருத்துகளிலே தேர்ச்சியும் பெற்றிருந்தவர். அவர் தாம் இயற்றிய தனிச் சிறப்புக்குரிய
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/40
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
