22 தமிழ்க்கடல் அலை ஓசை நாடக இலக்கியமாகிய "மனோன்மணீயத்தின் தொடக்கத்தில் கடவுள் வணக்கத்தை அடுத்துத் தமிழ்த் தெய்வ வணக்கமும் கூறியுள்ளார். என்றுமுள தென்தமிழ் என்பதாலே, தமிழ் அன்னையைத் தெய்வமாகவே கொண்டு அவர் போற்றிப் பாடிய பாட்டினை யாரும் மறக்க முடியாது. அவர்தம் கண்குளிர,செவியார நாவினிக்க, சிந்தை மகிழ, நாளும் கண்டும், கேட்டும், உரைத் தும், உணர்ந்தும் ஒன்றி நின்ற தாய்மொழியைத் தெய்வ மாகவே போற்றி வணங்கினார். தமிழின் உறைவிடத்தையும் உலகிற்கு அதனால் விளையும் பயனையும் எண்ணிப் பாடினார். இதனை, "நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே தெக்கணமும் அதிற்சிறந்த திரவிடநல் திருநாடும் அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே" எனும் பாடல் மூலம் நாம் அறியலாம். பெருநீர்ப் பரப்பாகிய கடலையே ஆடையாக உடுத்தியுள்ள நிலமகளுக்கு இயற்கை அழகு நிரம்பிய சிறப்புப் பொருந்திய ஒளி முகமென விளங்கு கின்ற பரதகண்ட மென்னும் இத் துணைக்கண்டத்தில் பொருத்தமாக அமைந்த சிறிய பிறைமதியன்ன நெற்றியாகவும், அதில் விளங்கும் நறுமணங்கமழும் பொட்டாகவும் விந்தியத் திற்குத் தெற்கேயுள்ள தெக்கணமும் அதிலும் மேம்பாடுடைய திராவிடத் திருநாடும் விளங்குகின்றன என்றார். உலகம் ஒரு பெண். அவள் முகமே பாரதம்; நெற்றி தெக்கணம்; அதில் திகழும் திலகம் திராவிடம். அப்படியானால் பார தம் சிறப்பதும் தெற்கிலேயன்றோ ! பேராசிரியர் சுந்தரனார் கருத்துப்படி புலவர் கட்கே உரிய கற்பனையின்படி பாரதத்தின் முகம் தெற்கிலே, இடை விந்தியத்திலே, அடி இமயத்திலே அமையுமன்றோ! இமயக் கல்லில் அடி வைத்து, குமரி முனையில் முடிவைத்து அன்றோ பாரதத்தை வரைந்து காண்கிறார்!
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/41
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
