பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யுகழ் மணக்குந் தமிழ் 28 அந்தத் திராவிடத் திலகத்தினின்றும் எழும் மணமாக, உலகெங்கும் உள்ளவர்கள் இன்பம் எய்திடவும், நாற்றிசை களில் மட்டுமன்றிப் பிற திசைகளிலும் தன் புகழ் விளங்கவும், தொன்னாள் முதல் இருந்தவளும் இன்றும் இருந்து எம்மை வாழ்விப்பவளுமான தமிழ்த்தாயே! என்று பூரிப்போடு விளிக் கின்றார். தொடர்ந்து அவர், "பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையான் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!'" என்று பாடலானார். பலப்பல உயிர்களையும், உலகங்களையும் தோற்றுவித்துக் காத்து அழித்திடினும், அவற்றிற்கு ஏதுவான ஒரு நிலைபெற்ற பொருள் (கடவுள்) காலத்தால் அளவிட்டு உரைக்கலாகாத அளவு என்றும் இருந்த தன்மையாகவே அன்றும் இன்றும் இருந்துவரும் தமிழ்த்தாயே, கற்கண்டென இனிக்கும் கன்னடமும் தேன் எனக் களிப்பூட்டும் தெலுங்கும் ஓசையினால் இனிமைதரும் மலையாளமும் இளம்பிள்ளையாக இலங்கும் துளுவும் நின் வயிற்றிலிருந்தே பிறந்து வளர்ந்து, நீ ஒருத்தியாக இருந்தும் அவை பலவாகப் பெருகி வாழ்ந்திடினும், எல்லா வகையினும் மேம்பாடுடைய மொழி என்று பறைசாற்றப்பட்ட வடமொழியைப் போன்று, உலகோர் உரை நடையில் வழங்கும் நிலைகெட்டுச் சீரழிந்து உருக்குலையாத உன்னுடைய சீர் வளரும் இளமைத் தன்மையைக் கண்டு, வியப்பு மேலிட்டு எமது மனம் உன்னையே எண்ணிக் களித்துக் கிடப்பதால் செய்வது அறியாது வாழ்த்திப் பணிகின்றோம்! என்றார் பேராசிரியர். தமிழின் மேன்மையைக் கூற வந்தவர், முன் இருந்த வாறே மாற்றமும் அழிவும் இன்றி நிலவும் பரம்பொருளோடு இப்பிடுகின்றார். பல உயிர்களையும் உலகங்களையும் படைத்துக்