பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தமிழ்க்கடல் அலை ஓசை . காக்கும் கடவுளுங்கூடப் பின்னர்--தொடர்ந்து காத்தலாகாமை யினால் போலும் அழித்துவிடுகின்றார். ஆயினும் தமிழ் பலமொழி களைத் தோற்றுவித்து வளர்த்திடினும் பின்னர் அவற்றை அழித்திடுதல் இல்லை. அதனால் பரம்பொருளினும் மேம்பட்ட தொரு பொருளாக அன்றோ தமிழைக் குறிக்கின்றார்! அதுகாறும் தமிழை வடமொழியோடு ஒப்பவைத்துப் பாடுவதே அரிதாக இருந்த நிலையில், ஒப்ப மதித்திடத் தெளிவு மட்டுமன்றித் துணிவும் வேண்டப்பட்ட நிலையில், வடமொழியாம் ஆரியத்தைப்போல் உலக வழக்கழிந்து ஒரு தேவபாடையாக ஆகிவிடாமல் இன்றும் ஐந்துகோடி மக்கள் பேச்சினிலே விளங்கி, அவர்தம் கருத்தினிலே வேரோடி நிற்கும் அழியாத இளமையுள்ள ஆற்றல்மிகு தமிழ் என்று உரைத்தார். அதன் மூலம் தமிழோடு வடமொழியை ஒப்பிடுவதே வேண்டப்படாதது விளக்கினார். தமிழ்த்தாயைத் தமிழர் உள்ளங்களில் தெய்வமாகக் கோயில் கொள்ளவைத்து வாழ்த்திய இப்பாட்டி னாலே பிறந்த எழுச்சி சிறிதன்று. என தமிழின் மேன்மையை விளக்கி அவர் பாடியது இது ! "கடல்குடித்த குடமுனியுன் கரைகாணக் குருநாடில் தொடுகடலை யுனக்குவமை சொல்லுவதும் புகழாமே! க் கடல் குடித்த அகத்தியரும் தமிழின் எல்லையை உணரக் குருவை நாடி அறிந்தார் எனப்படுதலின் ஆழ்கடலைத் தமிழுக்கு கூறினும், கடலுக்கே அது புகழாகும் என்றார். கடலைக் குடித்தவரும், தமிழின் எல்லையைத் தாமாகவே காண வில்லையன்றே! உவமை "ஒருபிழைக்கா அரனார்முன் உரையிழந்து விழிப்பாரேல் அரியதுன திலக்கணமென் றறைவதுமற் புதமாமே!" நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே" என்று நக்கீரனார் என்னும் நற்றமிழ் வல்லார் இறைவனாரையே எதிர் நின்று வாதாடினார் என்று கூறப்படும்போது தமிழ் மொழியின் இலக்கணம் மேம்பட்டது என்று கூறித்தான் வேண்டுமோ? கூறுவதும் வியப்பாமே என்றார். அறிய