பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மணக்குந் தமிழ் 25 இறையவனார் என்று சிவபெருமான் சுட்டப்படுதலின் அவர் வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத் தென்மொழியை அகத்தியருக்கு அறிவித்து அனுப்பினார் என்னும் பாட்டின் கருத்தினை நோக்குவார்க்கு, இறையவனாரே தமிழில் ஒரு பிழை செய்தாரெனில், அவர் படைத்தார் எனவும், அவரால் அறிவுறுத்தப்பட்ட அகத்தியர் தமிழ் செய்தார் எனவும் கொள்ளுதலின் உண்மை விளங்குகின்ற தன்றோ? மேலும் வடமொழியில் வல்ல அரனார், தமிழில் உரையிழந்து விழித்தா ரென்பதன் குறிப்பால் வடமொழி வல்லார்க்கும் தமிழ் அரிதாக மேம்பட்டு விளங்குதல் உணர்த்தப்பட்டது. "சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின் முதுமொழி நீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே" நான்கு வேதங்களை உடையது என்பதொன்றாலேயே பெருமை பெற்ற வடமொழி இந்நாட்டிற்கு வருமுன்னரே உலகமெல்லாம் தமிழைக் கொண்டே தமிழர்கள் தொடர்பு கொள்ளும் நிலையில் தமிழுக்கு உரியதாக இருந்ததெனில் அம்மொழியை முதிய மொழி, காலங்கடந்த மொழி என்று கூறவேண்டிய நிலை இருப்பதும் வியப்பே என்றார். மேலும் பல சிறப்புக்களைப் பாடிய சுந்தரனார், "வடமொழி தென்மொழியெனவே வந்தவிரு விழியவற்றுள் கெடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராரே!" "வீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால் கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார்” "கலைமகடன் பூர்வதிசை காணுங்கா லவள்விழியுள் வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் கலைமகளுடைய இருவிழிகளையும் இருமொழிகள் எனக்கொண்டும் அவற்றிடையே உயர்வு தாழ்வு கற்பிக்கும் கெடுமதியுடன், வடமொழி வலக்கண் என்போர் கிழக்கு மேற்கு