பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தமிழ்க்கடல் அலை ஓசை அறியா தவரே என்றார். கலைமகளுக்கு அவள் பார்க்கும் திக்கு என்று கூறப்படும் கிழக்கினை நோக்கும் நிலையில், வலப்புற விழியே தெற்குப் பக்கமாக விளங்குவதாகலின் அதையன்றோ தென்மொழி என்று கொள்வர் நல்லறிவாளர் என்று வினவு' கின்றார். மேலும், "பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ . எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே!' என்றதனால் வடமொழிவழி வந்துள்ள அறிவுக்கொவ்வாத, இலக்கணத்தோடு பொருந்தாத பொய்மைகளை இன்று போற்றுவோரும், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலான சங்கச் செய்யுட்களில் ஈடுபட்ட மனம் உடையவர்களாயின் போற்றுவார்களோ! மாட்டார்கள் என்று குறிப்பிட்டார். கருத்தால் சிறந்த சங்க இலக்கியங்களைக் கொண்ட செந்தமிழ் அறிந்தோர் கற்பனை புராணங்களால் மலிந்த வடமொழியை மதியார் என்பது தெளிவு. "வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி யொருகுலத்துக் கொருநீதி" வருணமுறைப்படியான நீதி கண்ட மனு முதலானோர் நூல் களின் கருத்துகளைத், திருக்குறள் காட்டும் பொதுநெறியினை உள்ளங் கொண்டோர் ஒருக்காலும் (மனுதருமத்தை) ஒரு நீதியாகக் கருதவும் மாட்டார் என்றார். இதனால் வடமொழி வல்லுநர்களுக்கு நீதியைக் குறித்து ஏற்படக்கூடிய அறிவுத் தெளிவைவிட, முப்பாலுந் தெளிந்து எப்பாலவருக்கும் ஏற்புடைத்தாகுமாறு வள்ளுவர் வழங்கிய திருக்குறள் நீதி தேர்ந்த ஒப்பிலாத் தமிழ்ப் புலவர்கட்குத் தோன்றக்கூடிய தெளிவின் உயர்வு எடுத்துக்காட்டப்பட்டது. தமிழின் வழிவழி வந்த நீதி நியாய அறவுணர்வுகளுக்கு இது சான்றாகும். அடுத்து, "மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள் கனஞ்சடையென் றுருவேற்றிக் கண் மூடிக் கதறுவரோ'