புகழ் மணக்குந் தமிழ் 27 என்று கேட்டதன் மூலம், தான் என்னும் அகந்தையை அகற் றித் தன்னை மறந்து, உள்ளங் கசிந்துருகத் துணையாகும் திருவாசகத்தில் - தமிழ் வாசகத்தில் திளைத்தவர்கள், கண்ணை மூடி உருவேற்றி உள்ளம் கனியாது கதறுவார்களோ! மாட்டார்கள் என்றார். வேதமந்திர பாராயணத்தினும் உள்ளங் கலந்து உருகிநிற்கும் வாசகங்களைக்கொண்ட தமிழைப் பாடுதலே பயன்மிக்கது என்றார் பேராசிரியர். இவ்வாறு தமிழ் அன்னையின் தன்னிகரற்ற பெருமையை யும், அதனைப் போற்றி வழிபடுவோர் பெறும் நன்மைகளையும் உணராது மாறுபட்ட கருத்தினராய் வடமொழியைப் போற்றித் தமிழை ஒதுக்கித் தாழ்த்துவோர் சிறுமையையும் விளக்கிப் பாடியதன் வாயிலாகத் தமிழ்மக்கள் தம் தாய்மொழியைப் பற்றிக்கொண்டிருந்த தாழ்வு எண்ணத்தை மாற்றிக்கொள்ள வழிகாட்டினார்! தமிழர்கள் தம் தாய்மொழியாந் தமிழைப் போற்றித் தமிழராகத் தலைநிமிர்ந்து வாழ உணர்ச்சி தந்தார், பேரறிஞர் மனோன்மணீயம் சுந்தானார்.
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/46
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
