தமிழ் இனிமை கெடுத்த தகாத கலப்பு 28-91 சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் (கி.பி. 1870) பிறந்து இளமையிலேயே தமிழொடு வடமொழியும் ஆங்கிலமும் கற்றுத் தாம் பயின்ற சென்னைக் கிறித்தவக் கல்லூரியிலேயே தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய அப்பெரியார், தமிழின் மேன்மையைத் தாம் உணர்ந்து, உலகிற்கு உணர்த்துவதில் தலைசிறந்து விளங்கினார். தமிழ்க்கலை வல்லுநராக விளங்கிய யாழ்ப்பாணம் தந்த பெரும்புலவர், சி.வை. தாமோ தரம்பிள்ளை யவர்களாலே, மாணவர் சூரியநாராயணனின் தமிழ்ப் புலமையும் கவிபாடுந் திறனும் ஆராயப்பட்டு, "திராவிட சாத்திரி" என்னும் சிறப்புப்பட்டமும் அளிக்கப்பட்டதெனில் அவரது பெருமைக்கு வேறென்ன சான்று வேண்டும்? அத்தகு திராவிட சாத்திரியார் இயற்றிய 'தனிப்பாசுரத் தொகை' (முதற்பகுதி) என்னும் நூலைக் குறிப்பிட்டுத் தமிழ்க் கலைச்செல்வியின் மறுமலர்ச்சியைக் காட்டும் நூல்கள் இரண் டனுள் ஒன்று 'மனோன் மணீயம்' என்றும், மற்றொன்று இந்தத் 'தனிப்பாசுரத் தொகை' என்றும் தமிழ் தேர்ந்த அறிஞரும், ஆங்கில மேதையுமான ஜி.யு. போப் ஐயர் கூறியுள்ளா ரெனில், அவரது தமிழ்த் தொண்டின் சிறப்பு விளக்கமாகும். வட அதுகாறும், தமிழின் மாட்சியை ஏற்பவருங்கூட மொழியின் துணைகொண்டே தமிழ் இயங்குவதாகவும், வடமொழிக் கலப்பால் தமிழ் அழகு பெற்று இலங்குவதாகவுமே எண்ணிக்கிடந்தனர். அது குறித்து ஆராய்ந்த சாத்திரியார்- வடமொழியின் துணையின்றித் தமிழ் இயங்கவல்லது என்னும் கருத்தைச் சான்றுகளுடன் வெளியிட்டார். 74 ஒரு காலத்தில், அவர் வடமொழிப் புலவர் ஒருவரோடு உரையாடிக் கொண்டிருந்த போது,அப்புலவர், "மெய் வாய் கண் மூக்கு செவி என்ற ஐம்பொறியானும் சிறந்து விளங்கி யாக்கைநலம் வாய்ந்த தமிழ்மகள், தான் சமக்கிருதநாயகனை எதிர்ப்பட்டு மணக்குங்காறும், முகங்காட்டாது தலைகவிழ்ந்து நின்றனள்! இஃதென்னே!" என்று கூறிப் புன்னகை செய் தனராம். அதனைக் கேட்ட திராவிடசாத்திரியார் அப்பொழுதே கூறினாராம்: "எவ்வாற்றானும் யாக்கை நலம் வாய்ந்தொளிரும்
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/48
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
