28-ஆ தமிழ்க்கடல் அலை ஓசை தமிழ்மகள், தன்னை மணக்குமாறு போந்த வடமொழி நாயகன் மூங்கையாய், வாய் திறத்தலின்றி, முகத்தினால் பல சைகைகள் செய்து நின்றமை கண்டு, முகஞ் செய்து புறக்கணித்து நின்றனள்! இஃதென் கொலோ!" என்று அந்த வடமொழி வாணர் தமிழினைத் தாழ்வான மொழி என்று சுட்டிக்காட்ட விரும்பியே, "தமிழில் முகத்தினைக் குறிக்கத் தக்க தமிழ்ச் சொல் இல்லை : 'முகம்' என்னும் சொல் வடமொழியே" என்று இறுமாந்து நகைத்தார். அவரது நகைப்பின் உட் கிடக்கை கண்ட சாத்திரியார்-இயற்கை வளர்ச்சியினால் ஓங்கி நிற்கும் தமிழ்மொழியின் நிகரற்ற தனித்தன்மையை விளக்குதற்கு, 'முகம்' என்னுஞ் சொல் தமிழே என்னும் கொள்கையில் உறுதி பூண்டவராய் அதனை வலியுறுத்திக் கூற, "தமிழ் மகள் முகஞ்செய்தாள்" எனக் குறிப்பிட்டு, வடமொழி யில் 'முகம்' என்னுஞ் சொல் வழங்குவதாயினும், 'வாய்'க்குத் தக்கசொல் வடமொழியில் இல்லாமையை, "வடமொழி நாயகன் மூங்கையாய் வாய் திறத்தலின்றி முகத்தினால் (அதுவும் தமிழி னின்றும் பெற்ற கடன்) பல சைகைகள் செய்து நின்றமை'யைத் தமிழ்மகள் கண்டாள் என உருவகித்துக்கூறி, அது பேச்சு வழக்கற்ற மொழி என்பதையும் அவ் வடமொழிவாணர் உணரு மாறு உரைத்து இளநகை செய்துள்ளார். ஆயின், தமிழை இழித்துரைக்கும் கருத்துடையாருக்கு அவர்தம் உட்கிடக்கையை மாற்றிக் கொள்ளுமாறு சாத்திரியார் அளித்த மாற்றம், தமிழின் மேதகவினைப் புலப்படுத்துவதன்றோ ! அக்காலத்தில் தமிழ்நிலத்தில் விளங்கிய ஊர்ப் பெயர் களும் மக்கள் பெயர்களும் வடசொற்களாகவே அமைந்திருந் ததைக் கொண்டு எல்லோரும் போற்றிக் கைக்கொள்ளும் அளவிற்கு வடமொழியே வளமுள்ளது எனவும், வடமொழித் துணையின்றித் தமிழும், தமிழரும் இயங்கல் இயலாது எனவும் பலரும் கருதுவாராயினர். தமிழ்மொழியைக் கொண்டே அனைத்தும் ஆகும் எனத் தெளிந்த சூரியநாராயண சாத் திரியார், பலரும் வடமொழியைப் பிரித்து வேறுபடுத்திக் காணாமையானும், அம்மொழிமீது பிறந்த பொருந்தாக் காத லாலும், முன்னர் வழங்கிய தமிழ்ப் பெயர்கள் பலவற்றையும்
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/49
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
