பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இனிமை கெடுத்த தகாத கலப்பு 29- எடுத்தாளும் அறிவும் ஆர்வமும் முயற்சியும் மங்கியதனாலுமே. இந்த அவலம் விளைந்தது என்று கண்டார். அதன் பயனாகத் தாம் அதுகாறும் எழுதிய பலநூல்களில் வடசொற்கள் விரவி வருவதை முறையாகவே கருதியிருந்த சாத்திரியார் அதன் பின்னர் வடசொற்கள் விரவாமல் எழுதுவதே தமிழுக்கு ஏற்றம் என உணர்ந்து மேற்கொண்டார். கற்றல் அரிது, கற்றதை விரித்து எழுதுதல் அதனை உரைத்தலினும் அரிது; அவ்வாறு எழுதும் நூல்களின் மொழி நடை இப்படி அமைய வேண்டும் என்று தீர்மானித்து அவ்வாறே இயற்ற முற்படுதல் அரிதினும் அரிதேயன்றோ! அவ்வாறு தமிழ்ப் பெருமை காக்க முனைந்தார் அவர். அதன் விளைவாகவே தம்மைப் பெற்றோர், அவரது மரபுக் குரிய முறைப்படி தமக்கிட்ட பெயரான சூரிய நாராயணன் என்பதையே தமிழ்ச் சொற்களாக அமைக்க விரும்பிப் பரிதிமால் எனப் புனைந்து கொண்டார். சூரியனைப் 'பரிதி' எனவும் நாராயணனை 'மால்' எனவும் சாத்திரியைக் 'கலைஞன்' எனவும். மொழி பெயர்த்து வழங்கலாயினார். தமிழுக்காகச் சாத்திரி அவர்கள் தம்மைக் கலைஞன் என்று அழைத்துக் கொள்ள முற்பட்டது வடமொழிச் சொற்களை நீக்கித் தமிழ்ச் சொற் களையே பெயர்களாக வழங்கலாகும் என்பதற்குக் கால்கோள் நாட்டியதாகும். பரிதிமாற் கலைஞன் அவர்கள், தமிழ்மொழி பற்றிய. ஆராய்ச்சியினில் ஈடுபட்டுத் தெளிந்து தமிழ்மொழி வரலாறு என்னும் அரியதொரு நூலினை இயற்றியதன் மூலம் தமிழின் மேன்மையை மறுப்பாரையெல்லாம் வாய் புதைக்கச் செய்தார். அதனுள் வடமொழிக் கலப்புக் குறித்து எழுதும் தொடக்கத் திலேயே "வடமொழி தமிழ் நாட்டில் வெகுநாள் தானும் இயங்கியும் அதற்குத் தமிழ் மொழியைத் தன் வழியில் திருப்பிக் கொள்ளுதற்குற்ற ஆற்றல் இல்லாது போயிற்று. வடமொழி யாளர் தமிழர்களுடைய ஒழுக்க வழக்கங்களை யுணர்ந்து அவற் றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர்- இன்றும் அவர்தம் புந்திநலங் காட்டித் தமிழரசர்களிடம்