- 30
தமிழ்க்கடல் அலை ஓசை அமைச்சர்களெனவும், மேலதிகாரப் பிரபுக்களெனவும் அமைந்து கொண்டனர்; தமிழரிடத்திருந்த பல அரிய உண்மை கருத்துகளையும் மொழி பெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும் வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்" என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும் வடமொழிச் சொற்கள் தமிழிலே கலத்தவ் குறித்து அவர் கருத்தாவது, "வடமொழி பேச்சு வழக்கற்று ஏட்டு வழக்காய்மட்டிலிருக்கும் நிலைமை எய்திவிட்டமையின், பேச்சு வழக்கிலுமிருந்த தமிழில் வடசொற்கள் புகுவது எளிதாகவும், வடமொழியில் தமிழ்ச் சொற்கள் யுகுவது அரிதாகவும் ஆகிவிட்டன. அதனாலேயே தமிழ்ப் புலவர்கள் ஆரியச் சொற்கள் தமிழில் தமிழில் வருவதற்கேற்ற விதிகளும் வகுத்தனர்" என்பதாகும். அடுத்துத் தமிழ்மொழியிலே வடமொழி வரன் முறை கடந்து கலக்க நேரிட்ட நிலைமையைக் குறித்து அவர் தம் உள்ளக் கிடக்கை இதுவாகும்: ஆசார "இந்நிலையில் சைனர் எழுந்தனர். அவர்கள் ஆரியருடைய சாரங்களுள் பலவற்றை மேற்கொண்டனர். அஃதன்றியும் வடமொழியின்கண் பெருமதிப்பு உடையராய் அதனைப் பெரிதும் பயில்வாராயினர். வடமொழியின் பாகதங்களையும் அவற்றின் இலக்கணங்களையும் நன்குணர்ந்து கொண்டிருந்த அவர்கள் தமிழைப் பயிலத் தொடங்கித் தமிழின் கண்ணே அளவிறந்த வடசொற்களை ஏற்றினர்". 'அத்துணையோடமையாது, "மணிப் பிரவாளம்'" என்றதோர் புதிய பாஷை வகுத்து விட்டனர். அஃதாவது வட மொழியும் தென்மொழியும் சரிக்குச்சரி கலந்த பாஷையாம். மணியும் பவளமும் கலந்து கோத்ததோர் மாலை காட்சிக்கின்பம் பயத்தல்போலத் தமிழும் சமஸ்கிருதமும் கலந்த பாஷை கேள்விக்கு இன்பம் பயக்கும் என்ற போலி எண்ணமே இத்தகைய ஆபாச பாஷை ஒன்று வகுக்குமாறு தூண்டிற்று.