பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இனிமை கெடுத்த தகாத கலப்பு 31 4‘ஸ்ரீபுராணம்” என்னும் சைன நூல் முழுதும் மணிப்பிரவாளம் என்னும் இவ்வாபாச நடையில் இயன்றதாமாறு காண்க." "இவ்வாறு சைனர் ஒரு புறம் செய்துகொண்டு செல்லா நிற்க, மற்றொரு புறத்தில் ஆரியப் புலவர் சிலர் தமிழ் மொழி யைப் பயின்று கொண்டு, நீதிநெறியையும் சமய நூல்களையும் தமிழர்க்குப் போதிப்போம் எனப் புகுந்து, தம்முடைய கருத்து களையெல்லாம் மேற்கூறிய மணிப்பிரவாள பாஷையில் வெளிப் படுத்துரைப்பாராயினர்.12 பல்லாற்றனும் வேற்றுமையுடையனவாய், வெவ்வேறிடத் தில் பிறந்து தனித் தனி வளர்ந்து மாறுபட்ட இலக்கணங் கொண்டு ஒலி அமைப்பில் முரண்கொண்ட இரு மொழிகளையும் கலந்து ஒரு புதுமொழி உருவாக்க முற்பட்ட செயலைப் போலி எண்ணத்தின் விளைவு எனவும் அது ஆபாச பாஷை எனவும் அவர் கடிந்ததனால்தான், அந்த ஆபாச பாஷை, கள்ளி என வளர்ந்து இனிய தமிழாம் முல்லைக் கொடியை மூடாமல் ஒழிந்தது எனல் தவறாகாது. தமிழ்ச் சொற்களோடு வடசொற்கள் விரவத் தொடுத்தல் மணியும் பவளமும் கலந்து கோத்த மாலை ஒக்கும் என்றன்றோ தமிழ் அருமை உணராதார் கூறினர். ஆனால், அது தமிழ் மணியோடு வடமொழி பவளம் கலந்தது போலன்றி, பவளத்தைப் போன்று செந்நிறம் உடையதான மிளகாய்ப் பழம் கலந்தது போன்ற பயனையே செய்தது என்பது அறிஞர் தம் கருத்தாம். மணியொடு மிளகாய்ப் பழத்தையும் விரவிக் கோத்து மாலையாக அணிய நேரிட்டால் சிறுபொழுது செல்லு முன்னரே மிளகாய்ப் பழத்தின் தோல் காய்ந்து காம்பொடிந்து, விதை உடம்பிலே பட்டு, வியர்வையோடு கலந்து, தோல் பொறுக்கவொண்ணா எரிச்சலைத்தான் தரும். தோல் தடித்து உணர்ச்சி கெடாத எவரும் அந்த எரிச்சலை உணர்வர். அதைப் போன்றே தமிழ்த்தாயின் எழில் நலம் மிகுந்த உடம்பிற்கு, கேணிப் பிரவான நடை எரிச்சலைத்தான் ஊட்டியிருக்க வேண்டும் என்பதை உணர்ந்த திராவிட சாத்திரியார் அதைக் கண்டிக்கத் தயங்கவில்லை. "