பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தமிழ்க்கடல் அலை ஓசை என மேலும் அவர் கூறினார்: "தமிழ்நாட்டில் ஆங்கில அரசாட்சி ஏற்பட்ட பின்னர்த் தாய்மொழியாகிய தமிழை அதன் வழிமொழிகளாகிய தெலுங்கு, கன்னட, மலையாள துளுவங்களோடு அடக்கி உள்நாட்டு மொழிகள்" வகைப்படுத்தினர் சிலர். தனிமொழி ஒன்றை அதன் வழி மொழிகளோடு வகைப் படுத்தலாமோ? அது முன்ன தனை (தமிழை) இழிவுபடுத்தியதாகாதோ? ஆரிய மொழிகளுள் தலை நின்ற வடமொழியை அதன் பாகதங்களோடு ஒருங்கு வைத்தெண்ணத் துணியாமைபோலத் தமிழ் மொழியையும் அதன் வழிமொழிகளோடு ஒருங்குவைத்து எண்ணத் துணியா திருத்தலே அமைவுடைத்தாம். இவ்வாறாகவும் நமது சென்னை சர்வகலாசாலையார் மேற்கூறியாங்கு, தமிழை இழிவுபடுத்தி வகுத்தபோதே தமிழராயினார் முற்புகுந்து அவ்வாறு வகைப் படுத்தல் சாலாதென மறுத்திருத்தல் வேண்டும். அப்போழ் தெல்லாம் வாய் வாளாமை மேற்கொண்டிருந்து விட்டனர் தமிழர். இவ்வாறு தமிழுக்குரிய தகுதிநிலை நாட்டப்படாத குறையை அவர் கண்டித்தார். மேலும், உலகத்தில் வழங்கும் மொழிகள் தொள்ளாயிரத் திற்கு மேற்பட்ட எண்ணிக்கையவாகவும், அவற்றுள் நான்கைந்து மொழிகளே "தொன் மொழிகள்" (Classical Languages) என்னும் சிறப்பிற்குரியனவாம். அந் நான்கைந் தனுள் தமிழ்மொழியும் ஒன்றாக ஏற்கப்படாத நிலையே அந்நாளில் இருந்தது. அதைக் கண்ணுற்ற பரிதிமாற் கலைஞன் அவர்கள், நிகழ்த்தும் வாதம் இது: "பரவை வழக் கற்று ஏட்டு வழக்காய் மட்டும் நிற்பனவே தொன்மொழிகள்; மற்று இக்காலத்தில் பரவை (பேச்சு) வழக்கால் இயங்குவன வெல்லாம் தொன்மொழிகள் ஆகாவென்பது சிலர் துணிபு, இத்துணிபு தருக்கநூற் குற்றமே. பாஷைகள் பரவை வழக் கற்றுப் போதற்குக் காரணம் இலிபிகள் (எழுத்துக்கள்) ஏற்படாமையும், பாஷை பேசுவோர் பல்வேறிடங்கட்குப் பிரிந்து செல்லலும், இடங்கட்குத் தக்கபடி புது இலிபிகள் வகுத்துக் கோடலும் பிறவுமாம். ஏட்டு வழக்குப் பேச்சு வழக்கோடு இணங்கி வராவிடின், பின்னது பிரிந்து கொண்டே போய்