தமிழ் இனிமை கெடுத்த தகாத கலப்பு 33 ஏட்டு வழக்கினின்றும் வேறுபட்டு அதன் வழிமொழி என்று கருதப்படும். அதனால் பேச்சு வழக்கோடு இணங்கி வாராதன வெல்லாம் தொன் மொழிகளோ? அல்ல.' - இந்த வாதத்தின் கருத்தை எண்ணுவோர்- தொன் மொழி என்னும் சிறப்புக்குரியதாக வடமொழியைக் கொண்டு, தமிழை விலக்கிய அறியாமையை எள்ளி நகையாடத்தான் செய்வர். ஒரு மொழி தொன்மொழி என்னும் பெருமையை கொள்ளத் துணையாவது ஏட்டு வழக்கிலே--நெடுங்காலத் திற்கு முன்னர் அஃது இடம் பெற்றுப் பல வகையாலும் உயர்ந்த கருத்துகளைத் தாங்கி நிற்றலேயாகும். அத்தகு தொன்மை யுடைய மொழிகள் யாவும் தொடர்ந்து பேச்சு வழக்கிலும் நீடித்து ஒரு தன்மையதாக நிலைத்தல் அரிதாகும். ? வட மொழியும், இலத்தீனும், கிரேக்கமும், எபிரேயமும் எய்திய நிலைதான் காலத்தால் ஏற்படுவது. ஆனால் தமிழோ முன்னைப் பழம் பொருளுக்குப் பழம் பொருளாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையதாய் நிலைத்துப், பேச்சு வழக்கிலும் நிலைத்தலுண்மை ஏதுவாக அது தொன்மொழி ஆகாது என்பது அறிவுடைமை ஆகுமா இதனைக் கருதித்தான் - பண்பாடு சிறப்புக்கு வேண்டும் தொன்மொழிப் பெருமை தமிழுக்கு உண்டு என்று பரிதிமாற் கலைஞள் தெளிவுபடுத்தினார். நாட்டு வழக்கினில் வாழாத மொழிகளே தொன்மொழி என்று கொள்ளும் இருள் விலகப் பரிதிமாற் கலைஞன் வீசிய அறிவு ஒளி ஏதுவாயிற்று எனல் மிகையாகாது. 3
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/54
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
