பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால்டுவெல் கண்ட கன்னித்தமிழ் மாட்சி இந்த இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலுமே தமிழின் தனித்தன்மை விவாதத்திற்குள்ளாக்கப்பட்டு வந்தது எனில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையில் தமிழ் மதிக்கப்பட்டவாறு யாதாம்? ஏதோ ஒரு பேச்சுமொழி; அதுவும் பிற இந்திய மொழிகளைப் போன்றே வடமொழி வழி பிறந்து வளர்ந்த மொழி; இந்திய, ஐரோப்பிய மொழி வகையைச் சார்ந்ததொரு மொழி! என்னும் கருத்துக்களே மொழிநூல் துறையினரிடம் மாறுபாடற்று நிலவியிருந்தது அக்காலம். தமிழின் தனித் தன்மை எதுவும் உலகிற்கு எடுத்துக் காட்டப்படாத நிலை. வடமொழியினை மூலமாகக் கொண்டு