பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால்டுவெல் கண்ட கன்னித்தமிழ் மாட்சி 35 இந்திய மொழிகளை ஆராய்ந்த பலருக்கும் தமிழின் தனி ஒளியும் சிறப்பு ஒலியும் புலனாகாமற் போய்விட்டன. அக்காலத்தில் ஒரு மொழியின் சிறப்பை உணர்தற்கு வேண்டிய பயிற்சியுடன் மொழிநூலார் எவரும் தமிழை ஆராயப் புகவில்லை. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் நேப்பாளத்தில் வாழ்ந்திருந்த ஹட்சன் என்னும் அறிஞர் தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் வழங்கிய சொற்கள் பலவற்றைத் தொகுத்து முறைப்படுத்தி வெளியிட்டார். ஆரியம் அல்லாத அச் சொற்களையும் அவை வழங்கிய மொழிகளையும் "திராவிடம்" என்னும் பெயரிட்டு அழைத்த முதல் மொழி நூலாசிரியரும் அவரேயாவர். I அதைத் தொடர்ந்து, ஆராய்ந்த 'பெறி" என்னும் அறிஞர் வடநாட்டில் வழங்கும் மொழிகள் பலவும் ஆரிய வகுப்பின என்றும், தென்னாட்டில் வழங்கும் மொழிகள் பலவும் தமிழ் வகுப்பின என்றும் தெளிவுபடுத்தினார். அக்கருத்து மேலைநாட்டு ஆராய்ச்சியாளர்களிற் பலர் தமிழைக் குறித்துப் புதிய ஆர்வத்தோடு ஆராய ஏதுவாயிற்று. அதன் பயனாகத் தென்னாட்டில் வழங்கிய மொழிகளைக் கற்றுத்தேற முற்பட்டவர் பலர். அவருள்ளும் சிலர் தென்னகத்திலேயே உறைந்து தென்மொழியில் ஒன்றைத் தேர்ந்து ஆராய்ச்சி நடத்த முற்பட்டனர். "டாக்டர் குண்டர்ட்" என்னும் செருமானிய மொழிப்புலவர் மேலைக் கடற்கரையில் வழங்கும் மலையாளத்தைக் கற்றுத் தெளிந்து ஆராயலானார். கருநாடகத்தில் வழங்கும் கன்னட மொழியைக் கிட்டல்" என்னும் பெரியார் ஆராய்ந்தார். பிரௌன்" என்னும் அறிஞர் தெலுங்கு மொழியிலே தேர்ச்சி யுற்று, அதன் சிறப்புகளை ஆராய்ந்து வெளியிட்டார். அதே காலத்தில் கிறித்தவ சமயத் தொண்டாற்ற வந்த கால்டுவெல் என்னும் பாதிரியார் தமிழகத்தின் தெற்குப் பகுதியில் தங்கி வாழ்ந்து தமிழினைக் கற்றுத் தேர்ந்து, மொழிநூல் ஆராய்ச்சி முறைப்படி தமிழின் இயல்பினையும் சிறப்பினையும் கண்டறிய லானார்.