36 தமிழ்க்கடல் அலை ஓசை பண்டைத் தமிழ்ச் சொற்களைப் பண்டைத் தமிழ் இலக் கியங்களினின்றும் தொகுத்து, பழங்கன்னடச் சொற்களோடும், ஆதி ஆந்திரச் சொற்களோடும் ஒப்பிட்டு நோக்கி அச் சொற் களின் வேர்கள் (மூலப் பகுதிகள்) ஒன்றுபட்டிருக்கக் கண்டு வடமொழியினின்றும் முற்றிலும் வேறுபட்டுத் தனித்தன்மை கொண்டிலங்குவது தமிழ் என்பது தெளிந்து வியந்து போற்றித் தமிழினது மாட்சியை உலகு ஒப்பும் வண்ணம் சான்றுகளுடன் நிலைநிறுத்தினார். தென்னாட்டு மொழிகளின் இயல்புச் சொற்களையும், இலக் கணப் பாகுபாட்டினையும் ஆராய்ந்து அவற்றிடையே காணும் ஒற்றுமையைப் புலப்படுத்தித் திராவிட மொழிகளின் ஒப்பிலக் கணம் கண்ட தனிப் பெருமை அவருக்குரியதாகும். 'திராவிட மொழி நூலின் தந்தை' என்று தமிழ் உள்ளளவும் போற்றப் படும் அருந் தொண்டாற்றியவர் அப் பெரியார். 1856ஆம் ஆண்டிலேயே வெளியிடப்பட்ட அவரது திராவிட ஒப்பியல் மொழிநூலைக் கண்டு கிளாஸ்கோ பல்கலைக் கழகம் அவருக்கு "டாக்டர்" பட்டம் வழங்கிச் சிறப்பித்தது எனில் அப் பணியின் அருமை விளங்கும். திராவிட மொழிகள் வடஇந்திய மொழிகளிலிருந்து பற்பல இயல்புகளில் வேறுபடுகின்றன. அவ்வாறிருந்தும், அத் திராவிட மொழிகள் வடஇந்திய மொழிகளைப் போலவே சமக் கிரதத்திலிருந்து பிறந்தனவாகச் சமக்கிரத பண்டிதர்களால் கருதப்பட்டன. தாங்கள் அறிந்த எப்பொருளுக்கும் பிராமண மூலம் கற்பிக்கும் இயல்பினர் அப் பண்டிதர்கள். அவர்கள் கூறும் அம்முடிவை, முதன் முதலில் வந்த ஐரோப்பிய அறிஞர் களும் அவ்வாறே ஏற்றுக் கொண்டனர். மேலும், திராவிடம் சமக்கிரதத்திலிருந்து பிறந்தது என்ற கருத்து, முந்திய தலைமுறையினராய மொழிநூல் வல்லுநர்க்கு ஏற்புடையதாய் விளங்கினும், இக்காலை அறவே அடிப்படை அற்றுப்போன கட்டுக்கதையாகி விட்டது. மேலே குறித்த சமக்கிரத பண்டிதர்கள், அம் மொழியை ஆழக்கற்று வடஇந்திய மொழி களை விளங்க அறிந்தவரே எனினும் திராவிட மொழிகளைச் சிறிதும் அறியாதவர், அல்லது சிறிதே அறிந்தவராவர்.
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/57
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
