கால்டுவெல் கண்ட கன்னித்தமிழ் மாட்சி 37 ஒப்பியல் மொழிநூலின் விதிமுறைகளில் ஒரு சிறு பயிற்சியும் பெறாத எவரும் திராவிட மொழிகளின் இலக்கண விதிகளையும், சொற்களையும் நன்கு கற்றுத் தேர்ந்து அவற்றைச் சமக்கிரத இலக்கண முறைகளோடும் ஒப்புநோக்க அறியாத எவரும், திராவிட இலக்கண அமைப்பு முறையும், சொல்லாக்க வடிவங் களும், இன்றியமையாச் சிறப்பு வாய்ந்த அவற்றின் எண்ணற்ற வேர்ச் சொற்களும், எத்தகைய சொல்லாக்க, சொற்சிதைவு முறைகளினாலேயாயினும், சமக்கிரதத்திலிருந்து தோன்றியன வாகும் என்று கூற உரிமையுடையவராகார். அதுகாறும் தமிழைக் குறித்துத் தவறான கண்ணோட்டத் தில் கொள்ளப்பட்டிருந்த முடிவை இவ்வாறு மறுத்து, திராவிட மொழிகளை ஆராய்வதற்கு வேண்டிய தகுதியை விளக்கினார் டாக்டர் கால்டுவெல் அவர்கள். திராவிட மொழிகளோடு சமக்கிரதம் உள்ளிட்ட இந்தோ ஐரோப்பிய மொழிகள் கொண்டுள்ளதாகக் காட்டப்படும் சில ஒற்றுமைப் பண்புகளைக் கொண்டு பழைமை வாய்ந்த உண்மை யான இனஉறவு இருக்கிறது என்று கொள்ளும் முடிவும் கற்பனையே எனவும் அவ்வாறு கொள்ளினும் சமக்கிரதத் திலிருந்து திராவிட மொழிகள் பிறந்தன என்று கூறும் கொள்கையிலிருந்து அது முற்றும் முரண்பட்டதாகும் எனவும் கூறியுள்ளதோடு டாக்டர் கால்டுவெல் அவர்கள், "திராவிட மொழிகள் அவ்வொற்றுமைப் பண்புகளைச் சமக்கிரதத்திலிருந்தே கடன் வாங்கின என்றோ, அவ்விரு இனமொழிகளுமே அவ்வொற்றுமைப் பண்புகளைத் தம் இரு மொழிகளுக்குமே புறம்பான ஒரு மொழியிலிருந்து ஒருசேரக் கடன் வாங்கின என்றோ கொள்வதற்கு மாறாகத் தன் அண்டை மொழிகளிடம் கடன் வாங்கத் தயங்காத சமக்கிரதம், அவ் வொற்றுமைப் பண்புகளைத் திராவிடத்திலிருந்தே கடன் வாங்கி யுள்ளது என்று கூறுவதால் (மேலே கூறிய) அவ்வொற்றுமைப் பண்புகள் அனைத்திற்கும் இல்லையாயினும் சிலவற்றிற்காவது, அமைதிகூற என்னாலும் ஆகும் என்று கருதுகின்றேன்" என வாதிட்டுள்ளார்.
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/58
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
