38 தமிழ்க்கடல் அலை ஓசை மேலும் திராவிட மொழிகளில் வந்து வழங்கும் சமக் கிரதச் சொற்களைப் பழந்திராவிட வேர்ச் சொற்களிலிருந்து வேறு பிரித்தறிவதில், பொதுவாக எவ்வித இடர்ப்பாடும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். "திராவிட மொழிகளைச் சமக்கிரதத்திலிருந்தே பிறந்தனவாகவே கொள்ளுதல் வேண்டும் என்று கூறும் கீழைநாட்டு மொழிநூலார், திராளிட மொழிகளில் சமக்கிரதச் சொற்கள் எங்கோ அருகி இடம் பெறுவதல்லது பொதுவாக அறவே இடம்பெருதனவாய திருந்தாத திராவிட மொழிகள் இருப்பதை அறிந்தவரல்லர். சமக்கிரதச் சொற்களை மேற்கொள்ளும் திராவிட மொழிகள் தாமும் அச் சொற்களை ஆடம்பரப் பொருளாகவும், அழகுதரும் பொருளாகவும் மதிப்பதல்லது மொழி வளர்ச்சிக்கு இன்றியமை யாதனவாக மதிப்பதில்லையா தலின் அவற்றை அறவே கைவிட்டும் வாழவல்லவாம் என்பதையும் அவர்கள் அறிந்தவ ரல்லர். தெலுங்கும் கன்னடமும் மலையாளமும் தம்தம் தனி நிலைகளை நிலைநாட்டுவது முற்றும் இயலாத அளவு சமக்கிரதச் சொற்களை அளவிற்கு மீறிக் கடன் வாங்கியுள்ளன. அவற்றின் துணையை எதிர்நோக்கி எதிர்நோக்கிப் பழகிவிட்டன. அவற்றின் இயல்பு அதுவேயாயினும், திராவிட மொழிகள் அனைத்தினும் உயர் தனிச் செம்மொழியாக நிலைபெற்று விளங்கும் தமிழ் தன்னிடையே இடம்பெற்றிருக்கும் சமக் கிரதச் சொற்களை அறவே ஒழித்துவிட்டு உயிர் வாழ்வதோடு, அவற்றின் துணையை ஒரு சிறிதும் வேண்டாமல், வளம்பெற்று வளர்வதும் இயலும்". இவ்வாறு தமிழின் தனித் தகுதியை விளக்கியுள்ளார் அப் பெரியார். செந்தமிழ் என்னும் சிறப்புப் பெற்றிருப்பது அது தனித் தமிழ் ஆவதனாலேயே என்று கண்ட டக்டர் கால்டுவெல் அவர்கள், "ஒரு தமிழ்ச் செய்யுள், இலக்கியச்சுவை மலிந்து, இலக்கியம் என்ற தகுதிக்கு உரியதாயுளது என்பது, பிறமொழி இலக்கியங்களில் உள்ளதுபோல், அச் செய்யுள் ஆண்டிருக்கும் சமக்கிரதச் சொற்களின் எண்ணிக்கை அளவைப் பொறுத் திராமல், அச் சமக்கிரத ஆட்சியிலிருந்து எந்த அளவு விடுதலை பெற்றிருக்கிறது, எந்த அளவு வடசொல் ஆட்சியை வெறுத்
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/59
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
