பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால்டுவெல் கண்ட கன்னித்தமிழ் மாட்சி 39 துள்ளது என்பதையே பொறுத்திருக்கிறது என்று மதிக்கு மளவு, கற்றுவல்ல தமிழ்ப் பெரியோர்கள் உள்ளத்தில், அச் சமக்கிரத (கலப்பினை விலக்கும்) வெறுப்புணர்ச்சி ஆழப் பதிந் துள்ளது. நகரத் தொடர்பற்ற நாட்டுப்புறங்களில் வாழும் கல்லா மக்கள் வழங்கும் பேச்சுத் தமிழ், சமக்கிரத ஆட்சியைக் கைவிடுவதில், செந்தமிழ் நடையோடு பேரளவு ஒத்துள்ளது' என்றும் தெளிவுபடுத்தினார். மேலும், தமிழில் வழங்கும் சமக்கிரதச் சொற்களைக் குறித்து அவர் தரும் விளக்கம் இது: "சமக்கிரதத்திலிருந்து தமிழ் கடன் வாங்கி யிருக்கும் சொற்கள் பெரும்பாலும் சமய உண்மைகள், அறிவியல் பொருள்கள் நுண்கலைகள் ஆகிய வற்றை வெளியிடத் துணைபுரிவனவே ஆகும். பிறதுறை இலக் கியங்களைக் காட்டிலும், சமக்கிரதச் சொற்களை மிகுதியாகக் கையாளும் சமயக் கருத்துகளை விளக்கும் உரை நடைகளிலுமே, தமிழ் மொழியில் கலந்திருக்கும் வடசொற்களின் அளவு, ஆங்கில மொழி இலத்தீன் மொழிச் சொற்களை மேற்கொண் டிருக்கும் அளவினும் அதிகம் அன்று". கிறித்தவ சமயத் தலைவர் ஒருவர், ஆங்கிலமொழி, இலத்தீன் மொழியினின்றும் பெற்றுள்ள துணையின் அளவு பற்றிக் கூறியிருப்பதைத் தமிழ்மொழி பெற்றுள்ள வடமொழித் துணையளவிற்குக் கூறுவது பொருந்தும் என எடுத்துக் காட்டு கின்றார். அக் கூற்றின்படி, "ஒரு மொழியின் தோல், இரத்தம், இறைச்சி, எலும்பு இவற்றின் இணைப்பு என மதிக்கத்தக்கன வான வாக்கியங்களை ஒழுங்கு செய்து ஒரு மொழியை உருவாக்க உதவுவனவாகிய இடப் பெயர்கள், துணை வினைகள் ஆகிய அனைத்தும் (தமிழே) திராவிடமே. ஒரு மாளிகையை அணி செய்ய உதவும், வனப்புற வனைந்து மெருகேற்றிய வண்ணக் கற்கள் போலும் பொருள்களைச் சமக்கிரதம் அளித்திருக்கும். ஆனால், அவை அனைத்தும் ஆங்காங்கே அமைந்து சிறந்த அழகு செய்ய உதவுவதும் அவையனைத்தையும் ஒன்று சேர்த்து உருவாக்கப் பயன்படுவதும் ஆகிய சுண்ணாம்புச் சாந்து முழுக்க முழுக்கத் திராவிடமே" என்னும் உண்மை பெறப்படும்.