பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தமிழ்க்கடல் அலை ஓசை " டாக்டர் கால்டுவெல் அவர்கள், "ஆங்கிலம், இலத்தீனுக்குக் கடன்பட்டிருப்பதைப் போலவே, தமிழும் சமக்கிரதத்திற்குக் கடன்பட்டிருப்பதாகக் கருதுவது அறவே பொருந்தாது. பொருள் விளக்கத்தைக் கைவிடாமல், இலத்தீன் சொற்களைக் கைவிடுவது ஆங்கிலத்திற்கு இயலாது. ஆனால், தமிழின் நிலை அத்தகையதன்று. சமக்கிரதச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்செல்வங்களை அஃது அளவின்றிப் பெற்றுள்ளது. வடமொழிச் சொற்களை உண்மையான தேவை குறித்து மேற்கொள்ளாது காலக்கோளாறு விரும்பும் வெளிப் பகட்டு காரணமாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றும் அறிவித்துள்ளார். "மேலும் புராணச் சார்பான சமயங்கள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றோடு புகுத்தப்பட்டு, பிராமண சமயங்களின் அளவிறந்த செல்வாக்கின் பயனாய் இன்றையத் தமிழ் உரைநடையில் கலந்திருக்கும் சமய விளக்கச் சொற்கள் பலவும் சமக்கிரத மூலச் சொற்களாகவே உள்ளன. அச் சொற்களுக்கு இணையாகவோ அவற்றிலும் சிறப்பாகவோ, அக் கருத்துகளை வெளியிடவல்ல தூய திராவிடச் சொற்களும் உள்ளன என்றாலும், உரைநடைகளில், அவற்றின் ஆட்சி பழக்கத்தில் இன்மையால் கடுந்தமிழ் நடைவாய்ந்து காது வெறுக்கும் கடின ஒலி உடையனவாகக் கருதுமளவு அச் சொற்கள் மெல்லமெல்ல வழக்கிறந்து போய்விட்டன. தமிழ் மொழியின் சமய இலக்கியங்களில் இலக்கியங்களில் சமக்கிரதச் சொற்கள் ஆட்சிபுரிவ தன் உண்மைக் காரணம் இஃது ஒன்றே!" இவ்வாறு வடமொழிச் சொற்கள் புகுந்த வழியையும், அதன் விளைவையும் விளக்கினார். மேலும் அவர் நிகழ்த்திய ஆராய்ச்சியில் தமிழைக் குறித்து வெளியிட்ட கருத்துகளில் பல எந்நாளும் நினைவிற் கொள்ள வேண்டியவை யாகும். "திராவிட மொழியின் தொன்மை நிலையை நிலை நாட்டப் பேரளவில் பெறலாகும் துணையினைச் செந்தமிழே அளிக்கிறது. இது திராவிட மொழிகள் அனைத்தினும் அது நனிமிகப் பழங் காலத்திலேயே நாகரிக நிலை பெற்றுவிட்டதன் விளைவாகும் !" "தமிழ்மொழி பெற்றிருக்கும் எண்ணி மதிப்பிடற்கியலாச் சொற் செல்வங்களும் செந்தமிழின் பல்வேறு வகைப்பட்ட