கால்டுவெல் கண்ட கன்னித்தமிழ் மாட்சி 41 இலக்கண வடிவங்களும்:அம்மொழிப் பழைமையை நிலைநாட்டும் வேறு நல்ல சான்றுகளாகும். செந்தமிழிலக்கணம், வழக் கிறந்து போன சொல் வடிவங்கள், கைவிடப்பட்ட சொல்லாக்க முறைகள், முரண்பட்ட மரூஉ முடிபுகள் ஆகிய பழம்பெரும் மொழிக் கருவூலங்களின் காட்சிக் கூடமாகும். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அமெரிக்கக் கிறித்தவ சமயப் பணியாளர் வெளியிட்ட தமிழ்க் கையகராதி 58,500 க்குக் குறையாத சொற்களைக் கொண்டுள்ளது என்பது ஒன்றே தமிழ் மொழியின் எண்ணிலாச் சொற் செல்வத்திற்குப் போதிய சான்றாகும். அவ்வகராதியைக் குறைவிலா முழுநூலாக ஆக்க வேண்டின், அதில் அடங்கியுள்ள சொற்களோடு கலைச்சொற் களும் குழூஉச் சொற்களும் திசைச் சொற்களும் தொகைச் சொற்களுமாக ஆயிரம் ஆயிரம் சொற்கள் மேலும் சேர்க்கப் படல் வேண்டும். தமிழ்ப்பேராசிரியர் ஒருவர் திராவிட இனப் பிறமொழி அகராதிகளை ஆராய்ந்து காணநேர்ந்தால் தமிழை நோக்க அம் மொழிகள் பெற்றிருக்கும் ஒத்த சொல்லுருவங் களின் குறைபாடல்லது வேறு எதுவும் அவர் கருத்தில் பதியாது. தமிழ் அகராதிகள் தமிழ்மொழிக்கே உரிமையானவையும் தமிழிலேயே வழங்குவனவுமாகிய சொற்களையே யல்லாமல் தெலுங்கு கன்னடம் போலும் பிற மொழிகளின் சொற்களென வழங்கப்படும் சொற்களையும் கொண்டுள்ளன. ஆகவே, தமிழ் இலக்கிய நாகரிகத்தின் தோற்றக் காலம், அவ்வினப் பிறமொழி இலக்கிய நாகரிகத்தின் தோற்றக் காலத்திற்கு மிகமிக முற்பட்டதாகுமென்றும், திராவிடத் தொன்மொழி, அவ்வினம் பல்வேறு மொழிகளாகப் பிரிவுண்ட காலத்திற்கு நனிமிக அணித்தான காலத்தைச் சேர்ந்ததாகும் என்றும் முடிவு கட்டிக் கூறலாம். தமிழில் வந்து வழங்கும் வடமொழிச் சொற்களை மிகவும் உருமாற்றி வழங்குவது அத்தமிழின் தொன்மைக்குப் பிறிதொரு சான்றாகும். தமிழ் இலக்கிய நாகரிக வளர்ச்சியின் தொன்மை, தமிழ்க் கல்வெட்டுகளாலும் நிலைநாட்டப் பெறும். கருநாடகத்திலும்,
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/62
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
