பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால்டுவெல் கண்ட கன்னித்தமிழ் மாட்சி 43 மேலும் - ஆரியத்தின்மீது திராவிட மூலமொழியும் அதன் இலக்கணக் கூறும் ஆட்சி பெற்றுள்ளது என்னும் உண்மையை யும் அவர் புலப்படுத்தினார். பேராசிரியர் பிளிக் என்பவர் "பால் வேறுபாடு உணர்த்தும் பிற மொழிகளிலிருந்து, ஆரியமொழிகள், பால் உணர்த்தா 'அஃறிணைச் சொற்களைப் பெற்றிருப்பதால், அவை வேறு பிரித்து அறியப்படும். ஆரியமொழித் தோற்றத்தின்போது, திராவிடச் செல்வாக்கும் ஓரளவு ஆட்சி புரிந்தது என்பதும் ஒருவகையில் ஏற்புடையதாம். வேறு சில இயல்புகளைப் போலவே, இவ்வஃறிணை ஒருமைப்பாடும் அவ்வாட்சியின் விளைவுகளில் ஒன்றாகும்" என்று கூறினார். அதனை எடுத்துக் காட்டி டாக்டர் கால்டுவெல் அவர்கள், "பால் வேறுபாடு, வேறு எம்மொழியிலும் இல்லாத அளவு, திராவிட மொழிகளிலேயே முறையாகவும் முழு அளவிலும் மேற்கொள்ளப்படுகிறது. இது சமக்கிரத ஆட்சியின் விளைவாக இருத்தல் இயலாது. மாறாக திராவிட ஆட்சியின் பயனாகவே சமக்கிரதத்திலும் அஃது இடம். பெற்றிருக்கும் என்றார். "ஒரே நாட்டில் திராவிட இனமும், ஆரிய இனமும் பல நூற்றாண்டுகளாக, அடுத்தடுத்து வாழ்ந்திருந்தமையால், திராவிட மொழிகள் (தமிழல்லாத பிற மொழிகள்) ஆரியச் சொற்களைப் பேரளவு கடன் வாங்கியுள்ளன. அதே நிலையில் திராவிடத்திலிருந்து கடன் வாங்க ஆரியமும் தயங்க வில்லை என்பதும் உணரற்பாலதாம்" என்று முடிவு செய் துள்ளார். இவ்வாறு தமிழ் மாட்சியை நிறுவிய கால்டுவெல் பெருந் தகையார், "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலமாக, மிகப் பெரிய இனத்தவரும், ஆற்றலும் நன்கு மதிக்கற்பாடும் உடையவரும், சமயத் துறையால் வழிபாட்டிற்கு உரியவருமான ஆரிய மக்களின் சமக்கிரத மொழியை எதிர்த்து நின்று, தம் ஆட்சியை நிலைநாட்டி வந்துள்ள திராவிட மொழிகள், தம் இடத்தைப் பற்றவரும் வேறு எம். மொழி முயற்சியையும், இனி வரும் காலங்களிலும் எதிர்த்து