பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க்கடல் அலை ஓசை அழித்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார். எந்நாளும் நம் நினைவில் நிலைக்க வேண்டியதன்றோ? இக் கூற்று "தமிழ் எம்மொழிக்கும் தாழ்ந்து வளையாது தலைநிமிர்ந்து நின்று, தன் தனித்தன்மை காத்து, தன்னை அணைத்து அழிக்க வந்த வடமொழியையும் வலுவிழக்கச் செய்து வாழ்ந்து வளர் கிறது" என்னும் பேருண்மையை ஒப்பிலக்கண முறைப்படி ஆராய்ந்து, உலகம் ஏற்கும் வண்ணம் நிலை நிறுத்திய டாக்டர் கால்டுவெல் அவர்கள், கன்னித் தமிழ் மாட்சியை நமக்குக் காட்டியவரல்வரோ! அவரது தொண்டிலே பிறந்த கருத்துக் கதிர் தமிழைச் சூழ்ந்திருந்த அறியாமை இருளை அகற்றிய அறிவொளியன்றோ! வாழ்க கால்டுவெல் நினைவு! வளர்க தனித் தமிழ் மாட்சி!