இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சீகன்பால்கு சிந்தை கவர்ந்த தமிழ் என்றுமுள இன் தமிழ்மொழி உலகோர் கருத்தினில் இடம் பெற்று, அறிவுக்கு விருந்தாகிப் பிற நாட்டவர் போற்றுதலைப் பெறவும், தமிழ்மக்களிடையே தம் தாய்மொழியைப் பற்றிய மதிப்பீடு உயரவும்,தாழ்வு மனப்பான்மை நீங்கவும் வழிகோலிய பெருமை மேலைநாட்டு நல்லறிஞர்களையே சாரும். அவர்கள் சமயத் தொண்டு ஆற்றவே தமிழகத்திற்கு வந்தவர் எனினும், தமிழ் மொழியின் இனிமை, மென்மை, எளிமை, தொன்மை ஆகிய இயல்புகளிலும், தமிழ் இலக்கியங்களில் இயற்கை நலம், அறிவு விளக்கம், அன்பு வளர்க்கும் பண்பு, கண்ட