பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தமிழ்க்கடல் அலை ஓசை அறநெறி மாட்சி ஆகிய சிறப்புகளிலும் ஈடுபட்டுத் தம் வாழ் நாளிலே பெரும் பகுதியைத் தமிழ்த் தொண்டிலேயே செல வழிப்பாராயினர். தமிழ் பயின்ற அம் மேலை நாட்டவர் தமிழில் முதன் முதலாக அச்சு முறையைக் கையாண்டு, நூல்களும் சிறு சிறு ஏடுகளும் அச்சியற்றி வெளியிட்டனர். தமிழ் எழுத்துகளையே சீர்திருத்தி அமைத்தனர். உரைநடையில் மொழி பிளந்து எழுத வழிகாட்டினர். மேனாட்டு மொழிகளில் உள்ள அகராதி களுக்கொப்பத் தமிழ் அகராதியும் கண்டனர். மேலை நாட்டு மொழிகளில் தோன்றியிருந்த சிறந்த நூல்களைத் தமிழாக்கம் செய்தனர். தமிழில் சிறந்திருந்த நூல்களை இலத்தீன், ஆங்கிலம் முதலான மொழிகளிலும் பெயர்த்து வெளியிட்டனர். தமிழ் மொழி இலக்கண இலக்கியங்களை ஆராய்ந்து ஒப்பியன் மொழி நூல் முதலான பல புதிய துறைகளைத் தோற்றுவித்தனர். சுருங்கக் கூறின் தமிழ் மறுமலர்ச்சிக்கே வித்திட்டனர் எனலாம். அம் மேலை நாட்டவர்தம் தகுதிமிக்க பணியால் அனைத்துலகும் இன்பமுறவும், எத்திசையும் புகழ் மணக்கவும் தமிழ் அணங்கு விளங்குகிறாள் என்பதும் மிகையன்று. தமிழ்க் கடல் அலை ஓசை எந்நாளும் எழுகின்ற சிறப்பு நோக்கித் "தரங்கம் பாடி” என்னும் கடற்கரைப் பட்டினமே, முதன்முதலாக மேலை நாட்டார் பலர் வந்துறைந்து தமிழுக்குத் தொண்டாற்றிய சிறப்புடைய தமிழ்ப் பாடி வீடாகத் திகழ்ந் துள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அங்கு வந்து தங்கிய செருமானியப் பாதிரியார் இரண்டலர் என்பார்,"செருமானியப் பல்கலைக் கழகங்களில் படிப்பிக்கத் தக்க சிறப்பு வாய்ந்த மொழி தமிழ்" என 1715ஆம் ஆண்டி லேயே தம் நாட்டவருக்கு எழுதியுள்ளார். இதனை அறியும் எவர்தாம் அவருக்கு நன்றிக் கடன் பட்டவர் ஆகார்? i அதே பட்டினத்தில் 1706ஆம் ஆண்டில் வந்திறங்கிய பார்த்தலோமசு சீகன்பால்கு என்னும் டேன் இனத்துப் பாதிரியார், தம் தாய்மொழியைப் போன்றே தமிழிலும் தேர்ச்சி பெற்று, தமிழிலேயே சிந்திக்கும் அளவு உள்ளத்தால்