பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீகன்பால்கு சிந்தை கவர்ந்த தமிழ் 47 கலந்து தமிழே பேசி வாழ்ந்து வந்துள்ளார். தமிழ் கற்பதிலே ஒரு தனிச் சுவை கண்டு, தமிழ் நூல்கள் சிலவற்றைத் திரும்பத் திரும்பப் பயின்று உணவருந்தும் வேளையிலும் அவர்தம் செவி தமிழமுதை நுகருமாறு பிறரைப் படிக்கச் சொல்லிக் கேட்டு வந்தார் எனில், அவரது ஆர்வம் அளவிடற் பாற்றோ! அக்காலத்தில் தமிழ்நாடும் மொழியும் மேலை நாட்டவரால் 'மலபார் என்னும்' பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்தது. அதன் விளைவாக "மலபார் நூல் பட்டியல்" எனும் பெயரில் அவர் எழுதிய குறிப்பேட்டில் அவரே படித்தறிந்த 161 தமிழ் நூல்களின் பெயர்களையும் பொருளடக்கத்தையும் விவரித்துள் ளார். தமிழ்மொழியின் இலக்கிய வளத்தை மேலை நாட்டார் அறிய இது கருவியன்றோ? சீகன்பால்கு அவர்களின் தலையாய முயற்சி தமிழ்ச் சொல் அகரவரிசை ஒன்றை உருவாக்க முனைந்ததாகும். அம்முயற்சி பிற்றை நாட்களில் தரங்கம்பாடி அகராதியும், வேறு சில அகராதி களும் வெளிவருவதற்கு ஏதுவாகவும் து ணையாகவு ம் அமைந்தது. ஈராண்டு முயற்சியிலேயே இருபதினாயிரம் தமிழ்ச் சொற் களையும், தொடர்களையும் தொகுத்த அப் பெரியார் அடுத்த நான்கு ஆண்டுகளில் நாற்பதினாயிரம் அளவு தொகுத்திட்டார். அவர் தொகுத்த இலக்கியச் சொற்கள் அகரவரிசை பதினேழா யிரம் செந்தமிழ்ச் சொற்களைக் கொண்டதாக அமைந்தது. தமிழ் இலக்கணம் பற்றிய விளக்க நூல் ஒன்றும் அவர் எழுதினார். தென்னக மக்கள் வாழ்க்கையில் படிந்திருந்த சமயக் கொள்கைகள், வழிபட்ட தெய்வங்கள் ஆகியவை பற்றியும் அவர் எழுதியுள்ளார். அவரியற்றிய அந்த நூல்கள், அந் நாட்ட வரால் கண்டு பிடிக்கப்படாமலே இரு நூற்றாண்டுகள் கடந்த நிலையில், இந்த நூற்றாண்டிலேதான் வெளியிடப்பட்டுள்ளன. அவர் இயற்றிய "மலபார் மக்கள் மதம்" என்னும் நூல், தமிழருடைய சமய தத்துவங்களையும், நெறிகளையும், ஆழ்ந்த