பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தமிழ்க்கடல் அலை ஓசை நம்பிக்கைகளையும் தமிழரிடையே நிலவிய சாதிகள், சடங்குகள், கலை, கவிதை, இசை, மருத்துவம், போர், உழவு முதலான பல்வேறு பொருள் குறித்து விவரிப்பதாகும். "மலபார் தெய் வங்கள்!" செய்தி அவரது நூலில் அவை தோன்றிய வீதம், அவற்றின் உருவம்,குணங்கள், பெயர்களின் பட்டியல், குடும் பங்களின் செய்திகள், அவற்றிற்குரிய பணியாளர் பணிகள், விருந்துகள் முதலான பலவும் விவரிக்கப்பட்டுள்ளன. இந் நூல்களைக் "கல்விக் களஞ்சியம் என்றே அழைக்கலாம் என் றுரைக்கிறார் டாக்டர் அர்ஜே லெமான் என்னும் செருமானியப் பல்கலைக் கழகப் பேராசிரியர் எனில், அவை தமிழரைப் பற்றிய ஒரு கலைக் களஞ்சியமாகத் தொகுக்கப்பட்டுள்ளது தெளிவாகும். மேலும் சீகன்பால்கு அவர்கள் சிறு குறிப்புகள் என்னும் தலைப்பில் தமிழ்ப் பாக்கள் பலவற்றைச் செருமானியில் மொழி பெயர்த்துள்ளார். நீதிவெண்பா, கொன்றைவேந்தன், உலக நீதி ஆகிய வாழ்வியல் விளக்கும் செய்யுட்கள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. அக்காலத்தில் ஐரோப்பிய மக்கள் மனத்தில் மலபார் மக்கள்" (தமிழர்கள்) இலக்கியப் புலமையும், ஒழுக்க மேம்பாடும் அற்ற அநாகரிகக் கூட்டத்தார்" என்னும் தவறான கருத்தே நிலவியதால் சீகன்பால்கு அவர்கள் அதனை மாற்றவும், தமிழ் அறிந்ததால் தாம் பெற்ற சிறந்த எண்ணங் களை மேலைநாட்டவருக்கு அறிவிக்கவுமே இவற்றை மொழி பெயர்த்ததாக அவரே குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு தமிழ் நலத்தை மேல்நாட்டவரும் உணரச் செய்ய அரும்பாடுபட்ட சீகன்பால்கு அவர்கள் தமிழைச் சீர் பெறச் செய்தவரல்லரோ? தொடக்கத்தில் குறிப்பிட்ட கிரண்டலர் என்பார் அக்காலத்திலேயே தமிழகத்தில் வழங்கிய மருத்துவ முறையின் தனிச் சிறப்பைக் கண்டு மருத்துவத்துறை பற்றி ஒரு நூல் [செருமானியில்] இயற்றினார். இதனாலும் தமிழரது அறிவுத்திறன் மேலை நாட்டவரால் ஏற்கப்படுவதாயிற்று. அதே செருமானிய நாட்டைச் சேர்ந்த அறிஞர் கார்ல் கிரவுல் என்பார் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையில்