பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரமாமுனிவர் வியந்தேத்திய தமிழ் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சீகன்பால்கு அவர்களின் தொண்டு நிகழ்ந்த அதே காலத்தில் தமிழ்த் தொண்டாற்றிய தனிப் பெருஞ் சிறப்புக்குரிய பெரியார், ஜோசப் கான்ஸ்டான்டைன் பெசுகி என்னும் பெயர் பெற்ற இத்தாலியராவர். தமிழகத்திலே வந்துறைந்த காலத்தில், கோவை, தூத்துக்குடி, மணப்பாடு முதலான ஊர்களில் வாழ்ந்து தமிழ் பயின்றார். இளமையிலே ஐரோப்பிய மொழிகளான இத்தாலி, இலத்தீன், எபிரேயம், கிரேக்கம் ஆகியவற்றில் பயிற்சி