பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரமாமுனிவர் வியந்தேத்திய தமிழ் 51 பெற்றிருந்த அவர், தமிழகத்தில் - தமிழுடன்-அதன் இன மொழிகளான, தெலுங்கும் கன்னடமும் பயின்றதோடு வட மொழியும் கற்றுத் தேர்ந்தார். தமிழ்ப் புலவராக விளங்கிய சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் பயின்றார். திருவள்ளுவரும், கம்பரும், திருத்தக்க தேவரும் அவருக்கு நட்பாயினர். தமிழ் உரைநடை மட்டுமின்றிக் கற்பனைக் கவின்மிகும் கவிதை இயற்றும் ஆற்றலும் கைவரப் பெற்றார். அவர் இயற்றிய 'தேம்பாவணி' என்னும் காப்பியும், பல்வேறு சமயச் சார்புடைய காப்பியங்களும் தமிழிலே தோன்றி இருந்தபோதிலும் கிறித்தவ சமயச் சார்புடைய காப்பியம் ஒன்றில்லை என்னும் குறையை நீக்கியது என்பதைவிடத் தமிழ் உள்ளம் பெற்றுவிட்ட வேற்று நாட்டவரும் தமிழிலே காப்பியம் இயற்ற முடியும் என்னும் பேருண்மையை விளங்கச் செய்தது. உரை நடையில் அவர் இயற்றிய நூல்களில் சமயச் சார்பானவை பல எனினும், பரமார்த்த குரு கதை' என்னும் நகைச்சுவைப் படைப்பு அத் துறையில் வழிகாட்டிய முதல் நூல் என்பது கருதத்தகும். அவரது உரைநடையின் சிறப்பினை அவரது 'வேதியர் ஒழுக்கம்' என்னும் நூலை, 'தமிழ் உரை நடை பயிலும் மாணவர்க்குரிய மேல்வரிச் சட்டமாக நான் மதிக்கிறேன்' என்று பின்னாட்களில் டாக்டர் ஜி. யு. போப் அவர்கள் கூறியதிலிருந்து தெளியலாம். பெசுகி அவர்கள், தமிழ் இலக்கணத்தையும் விரிவாக ஆராய்ந்து பல நூல்களை இயற்றினார். அவரது செந்தமிழ் இலக்கணத்திலே, இலக்கிய வழக்கிலே வரும் சொற் களுக்கான இலக்கணத்தையும், கொடுந்தமிழ் இலக்கணத்தில், தாட்டு வழக்கில் நிலவிய மொழி (சொற்கள்) வழக்கிற்கான இலக்கணத்தையும் விளக்கியுள்ளார். மேலும், அவர் இயற்றிய தொன்னூல் இலக்கணம், ஐந்திலக்கணத்தையும் சுருங்கக் கூறுவது. அதற்கு உரையும் அவரே வரைந்துள்ளார். இதன்கண், எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து கூறுகளும் விளக்கப்படுகின்றன, அதன் பொருள் .