52 தமிழ்க்கடல் அலை ஓசை பகுதியில், 'சொல்லோசை நலம்' (Rhetoric) குறித்தும் புதிய விளக்கம் காணப்படுகிறது எனில், அது தனிச் சிறப்புடைய நூல் அன்றோ! தமிழுக்கு அகராதி கண்ட திறத்தால், அவரது பணி எந்நாளும் மறக்க முடியாததாகிறது. தமிழ்ச் சொற்களை அகர வரிசைப்படுத்துவதில், பல பொருள் கொண்ட பெயர்ச் சொற் களாகத் தொகுத்துப் பெயரகராதி எனவும், பல பெயர் கொண்ட பொருள்களின் பெயர்களாகத் தொகுத்துப் பொருள் அகராதி எனவும், சொற்கள் பலவாகக் கூடி நின்று ஒரு சொல்லாக வழங்குவதைத் தொகுத்துத் 'தொகையகராதி' எனவும், எதுகை ஓசை ஒன்றாக வரும் சொற்களை யெல்லாம் வரிசைப் படுத்தித் 'தொடையகராதி' எனவும் அமைத்துச் 'சதுரகராதி' கண்டார். தமிழ்மொழியில் தோன்றிய நிகண்டு களிலும் சிறந்த முறையில், தமிழ் கற்போருக்குத் துணையாவது இந்தச் சதுரகராதி. 2 - மேலும் மொழி பெயர்ப்புக்குத் துணையாகுமாறு இலத்தீன் மொழியில், தமிழ் இலத்தீன்' அகராதி ஒன்றும் 'போர்ச்சுகீசியம் -- தமிழ், இலத்தீன்' அகராதி ஒன்றும் அவர் உருவாக்கினார். மேலும் இலத்தீன் மொழியில் திருக்குறள் அறத்துப் பாலும், பொருட்பாலும் இவரால் மொழிபெயர்க்கப்பட் டுள்ளன. இந்த வகையில் தமிழ்மொழியின் சிறப்புகள் பிற நாட்டவருக்கும் புலனாகுமாறு அருந் தொண்டாற்றிய பெசுகி அவர்கள், தமிழ் எழுத்து வடிவத்திலேயும் இன்றியமையாத சில திருத்தங்களைக் கண்டார். எ, ஒ என்னும் இரண்டு உயிர் களையும், அவற்றுடன் மெய் கூடுவதால் பிறக்கும் உயிர் மெய் களையும் குறிக்க அவற்றின் மேலே புள்ளிவைத்தும் நெடிலாயின் புள்ளி இன்றியும் அக் காலத்தில் எழுதி வந்தனர். புள்ளி வைக்கத் தவறுவதால் தோன்றும் குறைகளைத் தவிர்க்க எண்ணிய அப் பெரியார் புள்ளி முறையை நீக்கி, இன்று
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/73
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
