பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரமாமுனிவர் வியந்தேத்திய தமிழ் 53 வழங்கும் முறையில் நெடில் வடிவத்தை 'ஏ', 'ஓ' என மாற்றி வழங்கலானார். அதுவே நிலைபெற்று அவரது தொண்டுக்கு ஒரு நினைவுச் சின்னமாகவே விளங்குகிறது. தமிழுடன் கலந்த அப் பெரியார், தமது இயற்பெயராகிய கான்ஸ்டான்டியஸ் என்பது தமிழருக்கு விளங்குமாறு 'தைரிய நாதன்' என்று மொழிபெயர்த்துக் கொண்டார். அவரது தமிழ்த் தொண்டையும் துணிவையும் பாராட்டி மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் அவரை, 'வீரமாமுனிவர்' என்று பெயரிட்டு அழைத்துச் செந்தமிழ்த் தேசிகர்' என்னும் பட்டமும் வழங்கினர். மேலை நாட்டிலும் தமிழ் முழங்க வழிகண்டு, தமிழ் எழுத்திலும், இலக்கணத்திலும் புதுமை கண்ட கண்ட பெரியார் வீரமாமுனிவர் செந்தமிழ் வளர்த்த தேசிகரேயன்றோ! அடுத்து, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையே தமிழகம் போந்த அமெரிக்க நாட்டு வித்தகரான டாக்டர் வின்ஸ்லோவின் தமிழ்த் 1தாண்டு போற்றத்தக்கதாக அமைந்தது. தக்கார் பலரது துணைகொண்டு, தமிழைத் துறைபோகக் கற்று அதன் சிறப்பினைத் தெளிந்து உலகிற்கும் உணர்த்தினார். ஆங்கிலம் அறிந்த மேலைநாட்டினர் தமிழை எளிதாகக் கற்றுக்கொள்வதற்குத் துணையாக ஒரு தமிழ் ஆங்கில அகராதியை விரிவானதாகத் தாகுக்க அவர் முற்பட்டார். வீரமாமுனிவர் தொகுத்த சதுரகராதி முதலான சுவடிகளைத் துணைகொண்டு, இலக்கியச் சொற்களும் வழக்குச் சொற்களுமாக முப்பதினாயிரம் சொற்களைக் கொண்டதான அகராதியை இயற்றினார். அதற்கு முன்னர் இந்த அளவு சிறப்புடைய அகராதி வெளிவரவில்லை என்று கூறுமாறு அமைந்தது அது. அந்த அகராதியின் முன்னுரையே, தமிழைக் குறித்து டாக்டர் வின்ஸ்லோ அவர்கள் ஆராய்ந்து கண்ட பல முடிவுகளை வெளியிடும் சிறப்புடையது. வேற்று மொழியின் துணை இன்றித் தனித்து இயங்கும் ஆற்றலுடைய தமிழின் தொன்மை வியப்பளிப்பதாகும்.