54 தமிழ்க்கடல் அலை ஓசை மதுரைத் தமிழ்ச் சங்கம் நிலவிய காலத்துத் தொகுக்கப்பட்ட நூல்கள் பெருமை யளிப்பவையாகும்' என்னும் கருத்துடைய வராய், 'தமிழ்ச் செய்யுள், வடிவிலும் நடையிலும் கிரேக்க மொழிச் செய்யுட்களைக் காட்டிலும் தெளிவுடையதாகவும் திட்ப முடையதாகவும் கருத்தாழம் உடையதாகவும் விளங்குகிறது' எனவும், 'தமிழ் மொழி, நூல் மரபிலும் பேச்சு வழக்கிலும் இலத்தீன் மொழியைக் காட்டிலும் மிகுந்த சொல்வளம் கொண்டது' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கெ தமிழ்மொழி ஆங்கிலத்துக்கும் செருமானிக்கும் ஈடாக ஆற்றலோடு இயங்குகிறது எனவும் பாராட்டுகிறார். உலகத்தில் வழங்கும் மொழிகளை, மொழி நூலார் ஆரியம், (இந்திய ஐரோப்பிய மொழிகள்) துரானியம், செமிடிக் என்னும் முப் பிரிவாகப் பகுத்துக் காண்பர். அப் பிரிவுகளுள் ஒன்றில் இணைத்துக் காண வேண்டியதே முறை என்னும் கருத்தில், பேராசிரியர் மாக்ஸ்மூலர் அவர்கள், தமிழைத் துரானியக் குடும்பத்தில் சேர்த்தும், டாக்டர் கால்டுவெல் அவர்கள் தமிழைச் சித்திய குடும்பத்தில் சேர்த்தும் கருதுவர். டாக்டர் வின்ஸ்லோ அவர்கள், தமிழின் வேர்ச் சொற்களைக் கண்டு, அவற்றின் தனி இயல்பை ஆராய்ந்து காட்டித் தமிழ் ஒரு மூல மொழியாக, ஒரு தனிப் பிரிவாகக் கொள்ளப்பட வேண்டும் என்றார். எழுத்து, சுவடி முதலான தூய தமிழ்ச் சொற்களின் தொன்மையினையும் பொருண்மையினையும் கொண்டே தமிழ்க் குடும்பம் ஒரு தனிக் குடும்பம் எனக் காட்டுகின்றார் அவர். மேலும், 'தமிழ் எவ்வகையிலும் இழிந்த மொழியன்று; ஆங்கிலத்தின் மூல மொழியானது, எழுத்து வடிவம் பெறுதற்கு முன்னரே தமிழ் தெளிவுடன் சிறந்து விளங்கியது. அதன் பெயரே இனிமைப் பொருளது' எனவும் பாராட்டியுள்ளார். அரிய முயற்சியால் தாம் கண்ட தமிழ் ஆங்கில அகராதி மூலம் தமிழின் பெருமை உலகு உணருமாறு செய்த டாக்டர் வின்ஸ்லோவின் தமிழ்த் தொண்டு பெரிதன்றோ?
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/75
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
